• May 16 2026

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதிப் பாலத்தை விரைவாக சீரமைக்க-வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Ziya / May 16th 2026, 3:55 pm
image

தித்வா பேரிடர் காலத்தில் சேதமாகியுள்ள முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் வீதிபாலத்தை விரைவாகச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்துள்ள பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடொன்றைச் செய்யுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் குறித்த பாண்டியன் வீதிப் பாலத்தின் சீரமைப்புப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படுமெனப் பதிலளித்த வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர், தற்போது சேதமடைந்தநிலையிலும் பாதுகாப்பற்றவகையிலும் காணப்படும் பாண்டியன் வீதிப் பாலத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்துழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,


புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகில் பாண்டியன் வீதிப் பாலம் கடந்த தித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது.


குறித்த பாலமானது பாடசாலைக்கு அருகிலும், புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியிலும் இருப்பதால் அப்பாலத்தினை சீரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.


அத்தோடு இந்தப் பாலத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கை எந்தக்கட்டத்தில் இருக்கின்றது என்பதையும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் - என்றார்.


இந்நிலையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளர் இதன்போது பதிலளிக்கையில்,


ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதுடன், பொருத்தமான ஒருவரைத் தேர்வுசெய்து இந்த வேலைக்கான ஒபந்தமும் செய்யப்பட்டது.


ஆனால் அதனைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், ஒப்பந்ததாரர் இந்த வேலையை எடுத்துச்செய்ய மறுப்புத் தெரிவித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து இந்த வேலைக்குரிய மதிப்பீட்டு அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.


அந்தற்கமைய இந்த வேலையை பொருத்தமான ஒருவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிற்பாடு, விரைவாக அந்தப் பாலத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் குறித்த பாலத்தின் சீரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரிடம் வினவப்பட்டது.


அத்தோடு அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும், வீதியால் பயணிப்போருக்கும் ஆபத்தினை ஏற்படுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ள அந்த சேதமடைந்த பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை விரைவாக மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.


அந்தவகையில்  இந்த பாலத்தின் சீரமைப்பு வேலைகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளரால் தெரிவிக்கப்பட்டதுடன், விரைவில் சேதமடைந்த பாலத்தினைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதிப் பாலத்தை விரைவாக சீரமைக்க-வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து தித்வா பேரிடர் காலத்தில் சேதமாகியுள்ள முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் வீதிபாலத்தை விரைவாகச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்துள்ள பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடொன்றைச் செய்யுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் குறித்த பாண்டியன் வீதிப் பாலத்தின் சீரமைப்புப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படுமெனப் பதிலளித்த வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர், தற்போது சேதமடைந்தநிலையிலும் பாதுகாப்பற்றவகையிலும் காணப்படும் பாண்டியன் வீதிப் பாலத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்துழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகில் பாண்டியன் வீதிப் பாலம் கடந்த தித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது.குறித்த பாலமானது பாடசாலைக்கு அருகிலும், புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியிலும் இருப்பதால் அப்பாலத்தினை சீரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.அத்தோடு இந்தப் பாலத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கை எந்தக்கட்டத்தில் இருக்கின்றது என்பதையும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் - என்றார்.இந்நிலையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளர் இதன்போது பதிலளிக்கையில்,ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதுடன், பொருத்தமான ஒருவரைத் தேர்வுசெய்து இந்த வேலைக்கான ஒபந்தமும் செய்யப்பட்டது.ஆனால் அதனைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், ஒப்பந்ததாரர் இந்த வேலையை எடுத்துச்செய்ய மறுப்புத் தெரிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து இந்த வேலைக்குரிய மதிப்பீட்டு அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.அந்தற்கமைய இந்த வேலையை பொருத்தமான ஒருவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிற்பாடு, விரைவாக அந்தப் பாலத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த பாலத்தின் சீரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரிடம் வினவப்பட்டது.அத்தோடு அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும், வீதியால் பயணிப்போருக்கும் ஆபத்தினை ஏற்படுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ள அந்த சேதமடைந்த பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை விரைவாக மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.அந்தவகையில்  இந்த பாலத்தின் சீரமைப்பு வேலைகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளரால் தெரிவிக்கப்பட்டதுடன், விரைவில் சேதமடைந்த பாலத்தினைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement