மன்னார் மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் நடமாடும் சேவை நேற்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ளனர்.
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
குறிப்பாக ஆடு, மாடு, கோழி, பன்றி ,எருமை மாடு போன்ற இழப்புக்களை பண்ணையாளர்கள் சந்தித்துள்ளனர்.
இதனால் எஞ்சிய கால்நடைகளை காப்பாற்றவும், பண்ணையாளர்களுக்கு நிவாரணமாகவும் 6 மிருக வைத்தியர்கள் வெவ்வேறு இடங்களில் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கான அனுசரணையை மத்திய அமைச்சு, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், இலங்கை கால்நடை அரச வைத்தியர் சங்கம், இலங்கை கால்நடை வைத்தியர் சங்கம் ஆகியோர் வழங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தொடர்ந்து தமது தொழிலை முன்னோக்கி செல்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் நடமாடும் சேவை மன்னார் மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் நடமாடும் சேவை நேற்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ளனர். மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.குறிப்பாக ஆடு, மாடு, கோழி, பன்றி ,எருமை மாடு போன்ற இழப்புக்களை பண்ணையாளர்கள் சந்தித்துள்ளனர்.இதனால் எஞ்சிய கால்நடைகளை காப்பாற்றவும், பண்ணையாளர்களுக்கு நிவாரணமாகவும் 6 மிருக வைத்தியர்கள் வெவ்வேறு இடங்களில் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதற்கான அனுசரணையை மத்திய அமைச்சு, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், இலங்கை கால்நடை அரச வைத்தியர் சங்கம், இலங்கை கால்நடை வைத்தியர் சங்கம் ஆகியோர் வழங்கி உள்ளனர்.பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தொடர்ந்து தமது தொழிலை முன்னோக்கி செல்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.