• Apr 17 2026

இன்றும் நாளையும் வானில் அதிசயம்: விண்கல் மழையுடன் சுப்பர் மூனை காண வாய்ப்பு!

Ziya / Jan 3rd 2026, 2:38 pm
image

2026 ஆம் ஆண்டின் பிரதான விண்கல் மழைகளில் ஒன்றானது இன்றும் (03) நாளையும் இரவில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரையிலான நேரத்தில் வடகிழக்கு திசை வானில் இந்த விண்கல் மழையைப் பார்வையிட முடியும். 

மணிக்கு சுமார் 80 விண்கற்கள் வரை தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையத்தின் தலைவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

2026 புத்தாண்டில் வானியல் ரீதியாக பல முக்கிய நிகழ்வுகள் உள்ளன. குறிப்பாக ஜனவரி மாதம் மிகவும் விசேடமானது. தற்போது ‘சுப்பர் மூன்’ குறித்து பலர் பேசுகின்றனர். அதற்கு மேலதிகமாக, ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய சனி, ஞாயிறு தினங்களில் இரவு வானத்தை அவதானித்தால், பிரதான விண்கல் மழைகளில் ஒன்றை காண முடியும்.

பொதுவாக அதிகாலை 4, 5, 6 மணி போன்ற வேளைகளில், குறிப்பாக 4 முதல் 5 மணி வரை வடகிழக்கு திசையில் இவை தென்படும். மணிக்கு சுமார் 80 விண்கற்களை நாம் எதிர்பார்க்கிறோம். இது வால்வெள்ளியிலிருந்து உருவானதல்ல; சிறுகோள்கள் (Asteroids) மூலம் உருவான பகுதிகளாகவே கருதப்படுகிறது.

அடுத்து ஜனவரி 3 ஆம் திகதிக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. உண்மையில் இவ்வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள் மாத்திரமல்ல உள்ளன. பொதுவாக மாதத்திற்கு ஒன்றுதானே வரும். இம்முறை 13 பௌர்ணமி தினங்கள் உள்ளன. மே மாதத்தில் இரண்டு உள்ளன. இந்த ஜனவரி மாதத்தில் ஒரு பௌர்ணமி உள்ளது. அந்த பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட அதிக பிரகாசமாகத் தெரியும். அதனால்தான் பலர் இதனை 'சுப்பர் மூன்' என்கிறார்கள். பொதுவாகத் தெரிவதை விட 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமாகவும் இது தெரியும்.

பழகிய ஒருவருக்கே இதனை அவதானிக்க முடியும். சந்திரன் உதிக்கும்போதே இதைப் பார்ப்பது மிகவும் நல்லது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருகிறது. 3 ஆம் திகதி, பிற்பகல் இலங்கை நேரப்படி 3.32 மணியளவில் இது நிகழும். எனவே அந்த மிக நெருங்கிய சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால், அப்போது சந்திரன் சற்று பெரிதாகத் தெரியும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி சுமார் 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் நீள்வட்டப் பாதையில் பயணிக்கிறது. இந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும் சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால் அப்போது சுப்பர் மூன் தென்படுகிறது என மேலும் தெரிவித்தார்.



இன்றும் நாளையும் வானில் அதிசயம்: விண்கல் மழையுடன் சுப்பர் மூனை காண வாய்ப்பு 2026 ஆம் ஆண்டின் பிரதான விண்கல் மழைகளில் ஒன்றானது இன்றும் (03) நாளையும் இரவில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, நாளை அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரையிலான நேரத்தில் வடகிழக்கு திசை வானில் இந்த விண்கல் மழையைப் பார்வையிட முடியும். மணிக்கு சுமார் 80 விண்கற்கள் வரை தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையத்தின் தலைவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,2026 புத்தாண்டில் வானியல் ரீதியாக பல முக்கிய நிகழ்வுகள் உள்ளன. குறிப்பாக ஜனவரி மாதம் மிகவும் விசேடமானது. தற்போது ‘சுப்பர் மூன்’ குறித்து பலர் பேசுகின்றனர். அதற்கு மேலதிகமாக, ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய சனி, ஞாயிறு தினங்களில் இரவு வானத்தை அவதானித்தால், பிரதான விண்கல் மழைகளில் ஒன்றை காண முடியும்.பொதுவாக அதிகாலை 4, 5, 6 மணி போன்ற வேளைகளில், குறிப்பாக 4 முதல் 5 மணி வரை வடகிழக்கு திசையில் இவை தென்படும். மணிக்கு சுமார் 80 விண்கற்களை நாம் எதிர்பார்க்கிறோம். இது வால்வெள்ளியிலிருந்து உருவானதல்ல; சிறுகோள்கள் (Asteroids) மூலம் உருவான பகுதிகளாகவே கருதப்படுகிறது.அடுத்து ஜனவரி 3 ஆம் திகதிக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. உண்மையில் இவ்வருடத்தில் 12 பௌர்ணமி தினங்கள் மாத்திரமல்ல உள்ளன. பொதுவாக மாதத்திற்கு ஒன்றுதானே வரும். இம்முறை 13 பௌர்ணமி தினங்கள் உள்ளன. மே மாதத்தில் இரண்டு உள்ளன. இந்த ஜனவரி மாதத்தில் ஒரு பௌர்ணமி உள்ளது. அந்த பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட அதிக பிரகாசமாகத் தெரியும். அதனால்தான் பலர் இதனை 'சுப்பர் மூன்' என்கிறார்கள். பொதுவாகத் தெரிவதை விட 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமாகவும் இது தெரியும்.பழகிய ஒருவருக்கே இதனை அவதானிக்க முடியும். சந்திரன் உதிக்கும்போதே இதைப் பார்ப்பது மிகவும் நல்லது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருகிறது. 3 ஆம் திகதி, பிற்பகல் இலங்கை நேரப்படி 3.32 மணியளவில் இது நிகழும். எனவே அந்த மிக நெருங்கிய சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால், அப்போது சந்திரன் சற்று பெரிதாகத் தெரியும். பொதுவாகச் சந்திரன் பூமியைச் சுற்றி சுமார் 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் நீள்வட்டப் பாதையில் பயணிக்கிறது. இந்த நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும் சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால் அப்போது சுப்பர் மூன் தென்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement