• May 27 2026

நாட்டில் மழை அதிகரிக்கும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Aathira / May 26th 2026, 9:55 am
image

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்பட்டு வருவதால், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


நாட்டில் மழை அதிகரிக்கும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்பட்டு வருவதால், அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement