• Aug 14 2026

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வைத்திய முகாம்

Aathira / Aug 13th 2026, 1:00 pm
image

மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான இலவச ஆலோசனை வைத்திய முகாம் இன்று வியாழக்கிழமை (13) மூதூர் திரிசீடி தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலயக் கல்விப் பணிப்பாளர் எம். சிராஜ் தலைமையில் இந்த வைத்திய முகாம் இடம்பெற்றது.

இவ் வைத்திய முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் கலந்து கொண்டு வைத்திய சேவைகளையும் வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், விசேட தேவையுடைய மாணவர்களையும் அதிதிகளையும் மகிழ்விக்கும் வகையில் பாடல் பாடிய Zee Tamil புகழ் வர்ஜா சசிகுமார் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், முஸ்லிம் எயிட் மற்றும் வேர்ல்ட் விஷன் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வைத்திய முகாம் மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான இலவச ஆலோசனை வைத்திய முகாம் இன்று வியாழக்கிழமை (13) மூதூர் திரிசீடி தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலயக் கல்விப் பணிப்பாளர் எம். சிராஜ் தலைமையில் இந்த வைத்திய முகாம் இடம்பெற்றது.இவ் வைத்திய முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் கலந்து கொண்டு வைத்திய சேவைகளையும் வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.அத்துடன், விசேட தேவையுடைய மாணவர்களையும் அதிதிகளையும் மகிழ்விக்கும் வகையில் பாடல் பாடிய Zee Tamil புகழ் வர்ஜா சசிகுமார் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், முஸ்லிம் எயிட் மற்றும் வேர்ல்ட் விஷன் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement