• May 19 2026

தம்புத்தேகமவில் யானை தாக்கி நபர் உயிரிழப்பு!

shanu / Dec 20th 2025, 8:23 pm
image

தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


குறித்த நபர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு உயிரிழந்தவர் மலியதேவபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 


தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக நேற்று (19) இரண்டு நண்பர்களுடன் வயல்வெளிக்கு அருகிலுள்ள வீதியின் மதகு ஒன்றுக்கு அருகில் இருந்தபோதே, அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. 


அவருடன் இருந்த இரண்டு நண்பர்களும் மதகுக்கு கீழே குதித்து உயிர்தப்பத்துள்ளனர். உயிரிழந்த நபர் யானையிடமிருந்து தப்புவதற்காக வீதியில் ஓடிய போதிலும், அவரைத் துரத்திச் சென்று யானை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தம்புத்தேகமவில் யானை தாக்கி நபர் உயிரிழப்பு தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மலியதேவபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக நேற்று (19) இரண்டு நண்பர்களுடன் வயல்வெளிக்கு அருகிலுள்ள வீதியின் மதகு ஒன்றுக்கு அருகில் இருந்தபோதே, அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. அவருடன் இருந்த இரண்டு நண்பர்களும் மதகுக்கு கீழே குதித்து உயிர்தப்பத்துள்ளனர். உயிரிழந்த நபர் யானையிடமிருந்து தப்புவதற்காக வீதியில் ஓடிய போதிலும், அவரைத் துரத்திச் சென்று யானை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement