• Aug 12 2026

சம்மாந்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு மாடுகள் மற்றும் கடத்தல் கார் மீட்பு

dorin / Aug 11th 2026, 2:10 pm
image

சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி  காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.

சுற்றிவளைப்பின்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இருப்பினும், தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரினதும் அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவாகக் கைது செய்வதற்கான தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சோதனையை நடத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு மாடுகள் மற்றும் கடத்தல் கார் மீட்பு சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி  காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.சுற்றிவளைப்பின்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இருப்பினும், தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரினதும் அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவாகக் கைது செய்வதற்கான தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சோதனையை நடத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement