• Jun 04 2026

பணிக்கால நிறைவில் இந்தியத் தூதரக அதிகாரிக்கு ஜே.வி.பியின் பாராட்டு

dorin / Jun 3rd 2026, 9:27 pm
image

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை நிறைவு செய்யும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் இறுதி உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அண்மைய காலங்களில் எடுக்கப்பட்ட இருதரப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே வழங்கிய நட்புறவுடனான பங்களிப்புகளுக்குப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். குறிப்பாக, 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தனது இராஜதந்திரக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறத் தயாராகும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் எதிர்காலப் பணிகள் சிறக்கத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் ரில்வின் சில்வா இதன்போது பகிர்ந்துகொண்டார்.

பணிக்கால நிறைவில் இந்தியத் தூதரக அதிகாரிக்கு ஜே.வி.பியின் பாராட்டு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை நிறைவு செய்யும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் இறுதி உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அண்மைய காலங்களில் எடுக்கப்பட்ட இருதரப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இலங்கையில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே வழங்கிய நட்புறவுடனான பங்களிப்புகளுக்குப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். குறிப்பாக, 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.தனது இராஜதந்திரக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறத் தயாராகும் பிரதி உயர்ஸ்தானிகர் பாண்டேயின் எதிர்காலப் பணிகள் சிறக்கத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் ரில்வின் சில்வா இதன்போது பகிர்ந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement