வடக்கு மாகாணத்தில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (25) காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
ஆர்வம் மற்றும் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும் எனவும் கல்வித் தகைமைகள் மற்றும் இதர மேலதிக விவரங்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் பொறியியலாளர் – 10 வெற்றிடங்கள், வரைவாளர் – 5 வெற்றிடங்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர் – 20 வெற்றிடங்கள், வேலை மேற்பார்வையாளர் – 17 வெற்றிடங்கள் ஆகிய பதவிகளுக்காகத் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்.
வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்தில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (25) காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.ஆர்வம் மற்றும் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியும் எனவும் கல்வித் தகைமைகள் மற்றும் இதர மேலதிக விவரங்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிவில் பொறியியலாளர் – 10 வெற்றிடங்கள், வரைவாளர் – 5 வெற்றிடங்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர் – 20 வெற்றிடங்கள், வேலை மேற்பார்வையாளர் – 17 வெற்றிடங்கள் ஆகிய பதவிகளுக்காகத் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்.