நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் சேவையின் தேவை கருதி யாழ்ப்பாண மருத்துவ சங்கம்,மற்றும் மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து நடாத்திய 3 ஆவது இலவச மருத்துவ முகாம் யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.00 முதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றது.
மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் பொது மருத்துவ நிபுணர்கள், குழந்தைகள், சிறுவர் சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர்,
குழந்தை மருத்துவ நிபுணர், மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர், தோல் சிகிச்சை நிபுணர், பொது சத்திர சிகிச்சை நிபுணர் உட்பட்ட
மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் இணங்காணப்பட்ட நோயாளர்களுக்கான இலவச மருந்துப் பொருட்கள் வழங்கல்,
மேலதிக சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரச வைத்திய சாலைகளினுடாக சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை
போன்ற சேவைகளும் இடம்பெற்ற்ன.
குறித்த மருத்துவ சேவை முகாமிற்கான மருந்துப் பொருட்கள், குளுக்கோசு பரிசோதனை என்பவை யாழ்ப்பாண மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்தால் இலவசமாக வழங்கப்படிருந்தது.
இவ் இலவச மருத்துவ முகாமை யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி சமூகமும், யாழ்ப்பாண மருத்துவ சங்கம், மற்றும் மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பொது மருத்துவ நிபுணர்கள் டி. கண்டீபன் கே. சத்தியமூர்த்தி, எஸ்.பிரசாத், டி. அபிராமி ஆகியோரும், குழந்தைகள், சிறுவர் சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர்,பி. சாயந்தன், குழந்தை மருத்துவ நிபுணர்,ஆர். ஜெயரூபா, மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர் பி. கபிலேசன்,தோல் சிகிச்சை நிபுணர்,கே. அனுஷன், பொது சத்திர சிகிச்சை நிபுணர்,எஸ். கங்காயனன் உட்பட்ட மருத்துவ நிபுணர்களும்,மற்றும் மருதுவர்களும் கலந்துகொண்டு மருத்துவ சிகிக்சை, மற்றும் மருதுவ ஆலோசனைகளை வழங்கி வைத்தனர்.
இதில் 100 கணக்கானோர் பயன் பெற்றனர்
யாழ் மருத்துவ சங்கமும், மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் சேவையின் தேவை கருதி யாழ்ப்பாண மருத்துவ சங்கம்,மற்றும் மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து நடாத்திய 3 ஆவது இலவச மருத்துவ முகாம் யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.00 முதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றது.மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் பொது மருத்துவ நிபுணர்கள், குழந்தைகள், சிறுவர் சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர், குழந்தை மருத்துவ நிபுணர், மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர், தோல் சிகிச்சை நிபுணர், பொது சத்திர சிகிச்சை நிபுணர் உட்பட்ட மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் இணங்காணப்பட்ட நோயாளர்களுக்கான இலவச மருந்துப் பொருட்கள் வழங்கல், மேலதிக சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரச வைத்திய சாலைகளினுடாக சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை போன்ற சேவைகளும் இடம்பெற்ற்ன. குறித்த மருத்துவ சேவை முகாமிற்கான மருந்துப் பொருட்கள், குளுக்கோசு பரிசோதனை என்பவை யாழ்ப்பாண மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்தால் இலவசமாக வழங்கப்படிருந்தது. இவ் இலவச மருத்துவ முகாமை யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி சமூகமும், யாழ்ப்பாண மருத்துவ சங்கம், மற்றும் மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் பொது மருத்துவ நிபுணர்கள் டி. கண்டீபன் கே. சத்தியமூர்த்தி, எஸ்.பிரசாத், டி. அபிராமி ஆகியோரும், குழந்தைகள், சிறுவர் சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர்,பி. சாயந்தன், குழந்தை மருத்துவ நிபுணர்,ஆர். ஜெயரூபா, மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர் பி. கபிலேசன்,தோல் சிகிச்சை நிபுணர்,கே. அனுஷன், பொது சத்திர சிகிச்சை நிபுணர்,எஸ். கங்காயனன் உட்பட்ட மருத்துவ நிபுணர்களும்,மற்றும் மருதுவர்களும் கலந்துகொண்டு மருத்துவ சிகிக்சை, மற்றும் மருதுவ ஆலோசனைகளை வழங்கி வைத்தனர்.இதில் 100 கணக்கானோர் பயன் பெற்றனர்