நவாலப்பிட்டி நகரிலிருந்து கலபொட செல்லும் வீதியை எப்போது முழுமையாகப் புனரமைப்பீர்கள் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பின்னர் அவை பாதியிலேயே கைவிடப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், நீண்டகாலமாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைகளின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட வீதியூடாகச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், நோயாளிகளைத் தொட்டில் கட்டித் தூக்கிக்கொண்டு சுமார் ஒன்று முதல் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரை கொண்டு செல்ல வேண்டிய துயரமான நிலை ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இரவு நேரங்களிலும் இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், உரிய நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உரிய அதிகாரிகள் தமது நிலைமையைக் கவனத்தில் கொண்டு, நவாலப்பிட்டி – கலபொட வீதியை விரைவில் முழுமையாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றிப் பயணிக்கவும், மக்களின் போக்குவரத்துச் சிரமங்கள் நீங்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத அவலம். நவாலப்பிட்டி – கலபொட வீதியைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை நவாலப்பிட்டி நகரிலிருந்து கலபொட செல்லும் வீதியை எப்போது முழுமையாகப் புனரமைப்பீர்கள் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பின்னர் அவை பாதியிலேயே கைவிடப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நீண்டகாலமாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைகளின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட வீதியூடாகச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், நோயாளிகளைத் தொட்டில் கட்டித் தூக்கிக்கொண்டு சுமார் ஒன்று முதல் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரை கொண்டு செல்ல வேண்டிய துயரமான நிலை ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இரவு நேரங்களிலும் இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், உரிய நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உரிய அதிகாரிகள் தமது நிலைமையைக் கவனத்தில் கொண்டு, நவாலப்பிட்டி – கலபொட வீதியை விரைவில் முழுமையாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றிப் பயணிக்கவும், மக்களின் போக்குவரத்துச் சிரமங்கள் நீங்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.