• Apr 17 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது தவறு-எம்.பி.ஞானமுத்து சிறிநேசன் தெரிவிப்பு!

Ziya / Apr 17th 2026, 2:57 pm
image

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்; அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோலுக்கிணங்க புதிதாக நிர்மானிக்கப்பட்ட கண்ணனி விளையாட்டு மைதானத்தின் ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களினால் 2024ம் ஆண்டு 40 மில்லியன்  பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டதுடன் விளையாட்டு மைதானமும் புனரமைக்கப்பட்டது.


செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற செட்டிபாளையம் பிறீமியர் லீக் போட்டி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வின் போது குறித்த விளையாட்டரங்கு திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜானா, மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபை தவிசாளர் எம்.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது விளையாட்டு வீரர்கள் புடைசூழ அதிதிகள் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், புது கட்டிடத்திற்கான பால் பொங்கி தேங்காய் உடைத்து அதிதிகளினால் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுட, பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு விளையாட்டு மைதான பாவனைக்கு கட்டிடம் கையளிக்கப்பட்டிருந்தது.


தொடர்ந்து கழகத்தினால் முன்னெடுக்கப்படும் செட்டிபாளையம் பிறீமியர் லீக் போட்டிகளும் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,


இதனை நாங்கள் இரண்டு பக்கமாகப் பார்க்க முடியும். ஒரு பக்கம் சர்வதேச ரீதியான அரசியல் தாக்கம் எந்த அளவுக்கு எமது உள்நாட்டு அரசியலைப் பாதிக்கின்றது அல்லது உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. 


அந்த வகையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈராக்கிற்கு எதிராகத் தொடுத்திருக்கின்ற அந்த யுத்தம் என்பது எரிபொருள் ரீதியில் எங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


எரிபொருள் விலையேற்றம் என்பது எல்லாவற்றிற்கும் விலையேற்றத்தைக் கொண்டுவருகின்ற ஒரு விடயமாக இருக்கின்றபடியால், எரிபொருள் தட்டுப்பாடு அதனோடு சேர்ந்த விலை உயர்வு காரணமாக ஏற்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.


இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள், மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதேபோன்று வணிகத்துறை கூடப் பாதிக்கப்படுகின்றது; வணிகத்துறை பாதிப்பு என்று சொல்வதை விட அவர்கள் விலையேற்றங்களைச் செய்கின்ற போது சாதாரண நுகர்வோர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.


சாதாரண கூலியாட்கள் அதேபோன்று மத்தியதர வர்க்கத்தினர் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள். 


எனவே அரசாங்கம் நிச்சயமாக உலக ரீதியாகப் பொருளாதார ரீதியால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்குரிய நிவாரணங்களை அல்லது மானியங்களைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் திறைசேரியில் ஓரளவு நிதி சேர்ந்திருக்கின்றது. 


எனவே இந்த வெளிநாட்டு அரசியல், சர்வதேசப் போர் அரசியல் பாதிக்கப்படுகின்ற போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்குரிய நிவாரணங்களை, மானியங்களைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.


அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது உங்களுக்குத் தெரிய வேண்டும், உண்மையில் கடந்த கால மூன்று ஜனாதிபதிகள் இருந்தார்கள்.


அதாவது மைத்திரிபால சிறிசேன இருந்தார், அதற்குப் பிறகு கோட்டாபய ராஜபக்ச இருந்தார், ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்தக் குற்றவாளிகளை முதலாம் மட்டத்தில் உள்ள குற்றவாளிகள் அல்லது இரண்டாம் மட்டத்தில் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை.


இந்த அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் நாலாம் மட்டம், மூன்றாம் மட்டக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்ததோடு அவர்கள் அந்தப் பைலை மூடிவிடுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. இன்றைய நிலையில் எடுத்துக்கொண்டால் இரண்டாம் மட்டம் வரையும் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். அது சம்பந்தமாக ஆசாத் மௌலானா அவர்கள், அதாவது அந்தக் கட்சிகளோடு பின்னிப்பிணைந்திருந்த ஆசாத் மௌலானா அவர்கள் சேனல் 4  மூலமாக எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாகக் கொண்டு வந்திருக்கின்றார்.


எனவே இந்த விடயத்தை எடுத்துக்கொண்டுப் பார்த்தால் அடுத்த கட்டமாகக் கைது செய்யப்பட வேண்டிய முக்கியமான சூத்திரதாரிகள் அல்லது 'மெயின் சுவிட்ச்' என்று சொல்லுவார்கள்.


பிரதான அந்த ஆளி யார் என்பதை இப்போது தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.நிச்சயமாக மக்களுக்கும் விளங்கிவிட்டது, எங்களுடைய பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கும் விளங்கி இருக்கின்றது; இந்த முக்கியமான சூத்திரதாரி யார் என்பது விளங்கி இருக்கின்றது. 


எனவே அந்தச் சூத்திரதாரி எப்போது கைது செய்யப்படுவார்? இந்த ஆட்சி மாற்றத்திற்காகத் திட்டமிட்டு அந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலைச் செய்த முக்கியமான சூத்திரதாரி கைது செய்யப்படப் போவது எப்போது என்ற நிலை இருக்கின்றது.


இரண்டாவது விடயம், இன்னுமொரு விடயம் புலிகளிடம் இருந்த நிதி, பெருந்தொகையான நிதி குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் மற்றும் அவர்களோடு இருக்கின்றவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கின்றது என்று சொல்கின்றார்கள். பல கோடிக்கணக்கான நிதி அவர்களுடைய கையகப்படுத்தப்பட்டதாகச் செய்தி வந்திருக்கின்றது.


எனவே அந்த நிதி இருக்குமாக இருந்தால் உண்மையில் பல மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம்.முடிக்கப்படாமல் இருக்கின்ற பல வீட்டுத் திட்டங்களை முடிக்கலாம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை வாழ்வாதாரங்களைச் செய்துகொள்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.


எனவே அந்த முடக்கப்பட்டு இருக்கின்ற அந்த நிதியை அரசாங்கம் அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து மீட்டெடுத்து மக்களின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


இன்னுமொரு விடயம் அண்மையில் உதய கம்மன்பில அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றார். கடந்த காலத்தில் புத்தகம் வெளியிடுகின்ற ஒரு கலாச்சாரம் போய்க்கொண்டிருக்கின்றது. 


உதய கம்மன்பில புத்தகம் வெளியிடுகின்றார் என்றால் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஒன்று இருக்கின்றது. அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரி அதாவது கொல்லப்பட்டவர்கள் தான் முக்கியமான சூத்திரதாரிகள், அதாவது அந்தத் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கதையை முடிக்கப் பார்க்கின்றார். இதிலிருந்து எங்களுக்கு விளங்குகின்ற விடயம் என்னவென்றால் முக்கியமான சூத்திரதாரிகளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது அல்லது சட்டத்தின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தக்கூடாது என்பதற்காக இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.


ஆகவே இந்த அரசாங்கத்திடம் நாங்கள் மிகவும் ஒரு அன்பாகக் கேட்டுக்கொள்கின்ற விடயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக 269 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வழிபாட்டுத் தலத்திலே கொல்லப்பட்டிருக்கின்றார்கள், பல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 


நிச்சயமாக அந்த மக்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவது என்பது மிகவும் கேவலமான ஒரு நிலைமை. அதனை கட்டாயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும்.


அதேபோன்று கடந்த காலத்தில் எங்களுடைய மக்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டார்கள். இந்த காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் என்ற ஒரு பட்டியல் ஒன்று இருக்கின்றது, அதற்கான நீதி கிடைக்க வேண்டும். இதையும் விடச் சொல்லப்போனால் இந்த அரசாங்கம் இனப்பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் இன்னும் கைவைக்கவில்லை. புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.


இந்த அரசாங்கம் அதனைச் செய்து முடிக்குமாக இருந்தால் அது ஒரு சாதனையாக இருக்கும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்கின்றோம். இன்னும் அந்த இனப்பிரச்சினை என்பதைச் சாதாரண பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்; அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும்.


இல்லையென்றால் இந்த அரசாங்கம், இந்த அரசு தொடர்ந்து 75 வருடங்களாகச் சீரழிக்கப்பட்ட அரசாங்கம் போன்றுதான் இருக்கும். எனவே இடதுசாரிச் சிந்தனை உடைய இந்தத் தேசிய மக்கள் சக்தியினர் அதனை உணர்ந்து இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இப்போது மீண்டும் இனவாதிகள் தங்களுடைய ஏதோ ஒரு விடயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் இப்போது விழித்தெழுந்து இருக்கின்றார்கள். எனவே இதற்கெல்லாம் பதில் கொடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய விடயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அதேபோன்று இனப்பிரச்சினையை மீண்டும் இழுத்தடிக்காமல், இப்போது தொல்லியல் பிரச்சினை என்ற ஒரு விடயம் ஓடிக்கொண்டிருக்கின்றது. நெடியகால் மலையில் பௌத்தர்கள் ஒருவரும் இல்லாத இடத்தில் இப்போது விகாரைகள் கட்டப்படக்கூடிய அல்லது பௌத்த வழிபாட்டுத் தளம் கட்டுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.


இது மிகவும் பாதிக்கின்ற ஒரு விடயம். அண்மையில் எங்களுடைய தவிசாளராக எங்களுடைய மட்டக்களப்பு தவிசாளராக வந்திருந்த சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் எம்மிடம் சொன்னபோது, அவர் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அது கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருந்தார். ஆனால் அடுத்த தடவை வந்த போது ஒரு மாறுபட்ட கருத்து ஒன்று சொல்லப்பட்டது; அது போதி மரம் இருந்தது, புத்தர் விகாரை இருந்தது என்றெல்லாம் அங்கிருந்து வந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அல்லது தொல்லியல் உத்தியோகத்தர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.


எனவே தொல்லியல் என்ற போர்வையில், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்ற விடயத்தையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக இந்த அரசாங்கத்தையும் இனவாத அரசாங்கம் என்று மக்கள் நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே பௌத்த மதம் சார்ந்து செயற்பட்டால், பௌத்த மதத்திற்கு மாத்திரம் சார்ந்து செயற்பட்டால், சிங்கள மொழிக்கு மாத்திரம் சார்ந்து செயற்பட்டால் இந்த அரசாங்கத்தை முற்போக்குத்தனமான அரசாங்கம் என்று சொல்வதற்குரிய வாய்ப்பு இல்லாமற் போய்விடும். எனவே கடந்த கால அரசாங்கங்கள் செய்தது போன்று இல்லாமல் முற்போக்குச் சிந்தனையோடு, இடதுசாரிச் சிந்தனையோடு சகல மக்களையும் சமமாக மதித்து நடத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது தவறு-எம்.பி.ஞானமுத்து சிறிநேசன் தெரிவிப்பு பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்; அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோலுக்கிணங்க புதிதாக நிர்மானிக்கப்பட்ட கண்ணனி விளையாட்டு மைதானத்தின் ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களினால் 2024ம் ஆண்டு 40 மில்லியன்  பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டதுடன் விளையாட்டு மைதானமும் புனரமைக்கப்பட்டது.செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற செட்டிபாளையம் பிறீமியர் லீக் போட்டி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வின் போது குறித்த விளையாட்டரங்கு திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜானா, மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபை தவிசாளர் எம்.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது விளையாட்டு வீரர்கள் புடைசூழ அதிதிகள் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், புது கட்டிடத்திற்கான பால் பொங்கி தேங்காய் உடைத்து அதிதிகளினால் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுட, பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு விளையாட்டு மைதான பாவனைக்கு கட்டிடம் கையளிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து கழகத்தினால் முன்னெடுக்கப்படும் செட்டிபாளையம் பிறீமியர் லீக் போட்டிகளும் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,இதனை நாங்கள் இரண்டு பக்கமாகப் பார்க்க முடியும். ஒரு பக்கம் சர்வதேச ரீதியான அரசியல் தாக்கம் எந்த அளவுக்கு எமது உள்நாட்டு அரசியலைப் பாதிக்கின்றது அல்லது உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அந்த வகையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈராக்கிற்கு எதிராகத் தொடுத்திருக்கின்ற அந்த யுத்தம் என்பது எரிபொருள் ரீதியில் எங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.எரிபொருள் விலையேற்றம் என்பது எல்லாவற்றிற்கும் விலையேற்றத்தைக் கொண்டுவருகின்ற ஒரு விடயமாக இருக்கின்றபடியால், எரிபொருள் தட்டுப்பாடு அதனோடு சேர்ந்த விலை உயர்வு காரணமாக ஏற்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள், மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதேபோன்று வணிகத்துறை கூடப் பாதிக்கப்படுகின்றது; வணிகத்துறை பாதிப்பு என்று சொல்வதை விட அவர்கள் விலையேற்றங்களைச் செய்கின்ற போது சாதாரண நுகர்வோர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.சாதாரண கூலியாட்கள் அதேபோன்று மத்தியதர வர்க்கத்தினர் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே அரசாங்கம் நிச்சயமாக உலக ரீதியாகப் பொருளாதார ரீதியால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்குரிய நிவாரணங்களை அல்லது மானியங்களைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் திறைசேரியில் ஓரளவு நிதி சேர்ந்திருக்கின்றது. எனவே இந்த வெளிநாட்டு அரசியல், சர்வதேசப் போர் அரசியல் பாதிக்கப்படுகின்ற போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்குரிய நிவாரணங்களை, மானியங்களைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது உங்களுக்குத் தெரிய வேண்டும், உண்மையில் கடந்த கால மூன்று ஜனாதிபதிகள் இருந்தார்கள்.அதாவது மைத்திரிபால சிறிசேன இருந்தார், அதற்குப் பிறகு கோட்டாபய ராஜபக்ச இருந்தார், ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்தக் குற்றவாளிகளை முதலாம் மட்டத்தில் உள்ள குற்றவாளிகள் அல்லது இரண்டாம் மட்டத்தில் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை.இந்த அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் நாலாம் மட்டம், மூன்றாம் மட்டக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்ததோடு அவர்கள் அந்தப் பைலை மூடிவிடுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. இன்றைய நிலையில் எடுத்துக்கொண்டால் இரண்டாம் மட்டம் வரையும் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். அது சம்பந்தமாக ஆசாத் மௌலானா அவர்கள், அதாவது அந்தக் கட்சிகளோடு பின்னிப்பிணைந்திருந்த ஆசாத் மௌலானா அவர்கள் சேனல் 4  மூலமாக எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாகக் கொண்டு வந்திருக்கின்றார்.எனவே இந்த விடயத்தை எடுத்துக்கொண்டுப் பார்த்தால் அடுத்த கட்டமாகக் கைது செய்யப்பட வேண்டிய முக்கியமான சூத்திரதாரிகள் அல்லது 'மெயின் சுவிட்ச்' என்று சொல்லுவார்கள்.பிரதான அந்த ஆளி யார் என்பதை இப்போது தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.நிச்சயமாக மக்களுக்கும் விளங்கிவிட்டது, எங்களுடைய பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கும் விளங்கி இருக்கின்றது; இந்த முக்கியமான சூத்திரதாரி யார் என்பது விளங்கி இருக்கின்றது. எனவே அந்தச் சூத்திரதாரி எப்போது கைது செய்யப்படுவார் இந்த ஆட்சி மாற்றத்திற்காகத் திட்டமிட்டு அந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலைச் செய்த முக்கியமான சூத்திரதாரி கைது செய்யப்படப் போவது எப்போது என்ற நிலை இருக்கின்றது.இரண்டாவது விடயம், இன்னுமொரு விடயம் புலிகளிடம் இருந்த நிதி, பெருந்தொகையான நிதி குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் மற்றும் அவர்களோடு இருக்கின்றவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கின்றது என்று சொல்கின்றார்கள். பல கோடிக்கணக்கான நிதி அவர்களுடைய கையகப்படுத்தப்பட்டதாகச் செய்தி வந்திருக்கின்றது.எனவே அந்த நிதி இருக்குமாக இருந்தால் உண்மையில் பல மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம்.முடிக்கப்படாமல் இருக்கின்ற பல வீட்டுத் திட்டங்களை முடிக்கலாம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை வாழ்வாதாரங்களைச் செய்துகொள்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.எனவே அந்த முடக்கப்பட்டு இருக்கின்ற அந்த நிதியை அரசாங்கம் அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து மீட்டெடுத்து மக்களின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.இன்னுமொரு விடயம் அண்மையில் உதய கம்மன்பில அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றார். கடந்த காலத்தில் புத்தகம் வெளியிடுகின்ற ஒரு கலாச்சாரம் போய்க்கொண்டிருக்கின்றது. உதய கம்மன்பில புத்தகம் வெளியிடுகின்றார் என்றால் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஒன்று இருக்கின்றது. அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரி அதாவது கொல்லப்பட்டவர்கள் தான் முக்கியமான சூத்திரதாரிகள், அதாவது அந்தத் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கதையை முடிக்கப் பார்க்கின்றார். இதிலிருந்து எங்களுக்கு விளங்குகின்ற விடயம் என்னவென்றால் முக்கியமான சூத்திரதாரிகளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது அல்லது சட்டத்தின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தக்கூடாது என்பதற்காக இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஆகவே இந்த அரசாங்கத்திடம் நாங்கள் மிகவும் ஒரு அன்பாகக் கேட்டுக்கொள்கின்ற விடயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக 269 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வழிபாட்டுத் தலத்திலே கொல்லப்பட்டிருக்கின்றார்கள், பல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக அந்த மக்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவது என்பது மிகவும் கேவலமான ஒரு நிலைமை. அதனை கட்டாயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும்.அதேபோன்று கடந்த காலத்தில் எங்களுடைய மக்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டார்கள். இந்த காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் என்ற ஒரு பட்டியல் ஒன்று இருக்கின்றது, அதற்கான நீதி கிடைக்க வேண்டும். இதையும் விடச் சொல்லப்போனால் இந்த அரசாங்கம் இனப்பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் இன்னும் கைவைக்கவில்லை. புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.இந்த அரசாங்கம் அதனைச் செய்து முடிக்குமாக இருந்தால் அது ஒரு சாதனையாக இருக்கும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்கின்றோம். இன்னும் அந்த இனப்பிரச்சினை என்பதைச் சாதாரண பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்; அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும்.இல்லையென்றால் இந்த அரசாங்கம், இந்த அரசு தொடர்ந்து 75 வருடங்களாகச் சீரழிக்கப்பட்ட அரசாங்கம் போன்றுதான் இருக்கும். எனவே இடதுசாரிச் சிந்தனை உடைய இந்தத் தேசிய மக்கள் சக்தியினர் அதனை உணர்ந்து இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இப்போது மீண்டும் இனவாதிகள் தங்களுடைய ஏதோ ஒரு விடயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் இப்போது விழித்தெழுந்து இருக்கின்றார்கள். எனவே இதற்கெல்லாம் பதில் கொடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய விடயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.அதேபோன்று இனப்பிரச்சினையை மீண்டும் இழுத்தடிக்காமல், இப்போது தொல்லியல் பிரச்சினை என்ற ஒரு விடயம் ஓடிக்கொண்டிருக்கின்றது. நெடியகால் மலையில் பௌத்தர்கள் ஒருவரும் இல்லாத இடத்தில் இப்போது விகாரைகள் கட்டப்படக்கூடிய அல்லது பௌத்த வழிபாட்டுத் தளம் கட்டுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.இது மிகவும் பாதிக்கின்ற ஒரு விடயம். அண்மையில் எங்களுடைய தவிசாளராக எங்களுடைய மட்டக்களப்பு தவிசாளராக வந்திருந்த சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் எம்மிடம் சொன்னபோது, அவர் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அது கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருந்தார். ஆனால் அடுத்த தடவை வந்த போது ஒரு மாறுபட்ட கருத்து ஒன்று சொல்லப்பட்டது; அது போதி மரம் இருந்தது, புத்தர் விகாரை இருந்தது என்றெல்லாம் அங்கிருந்து வந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அல்லது தொல்லியல் உத்தியோகத்தர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.எனவே தொல்லியல் என்ற போர்வையில், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்ற விடயத்தையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக இந்த அரசாங்கத்தையும் இனவாத அரசாங்கம் என்று மக்கள் நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே பௌத்த மதம் சார்ந்து செயற்பட்டால், பௌத்த மதத்திற்கு மாத்திரம் சார்ந்து செயற்பட்டால், சிங்கள மொழிக்கு மாத்திரம் சார்ந்து செயற்பட்டால் இந்த அரசாங்கத்தை முற்போக்குத்தனமான அரசாங்கம் என்று சொல்வதற்குரிய வாய்ப்பு இல்லாமற் போய்விடும். எனவே கடந்த கால அரசாங்கங்கள் செய்தது போன்று இல்லாமல் முற்போக்குச் சிந்தனையோடு, இடதுசாரிச் சிந்தனையோடு சகல மக்களையும் சமமாக மதித்து நடத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement