எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படாத வகையில் கல்வியை உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் எனவும், அதன் போது பிள்ளைகளின் நலன்புரி விடயங்கள் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், இது ஒரு பாடசாலை மாணவருக்கு வழங்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மட்டுமல்ல எனவும், ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேல் மற்றும் தென் மாகாணப் பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை விநியோகிப்பதற்கான முன்னோடித் திட்டத்தின் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
இத்திட்டமானது அரசாங்கத்தின் அபிவிருத்திக் கருப்பொருளான 'அரசு, தனியார் துறை மற்றும் மக்கள்' ஆகிய முத்தரப்பினரின் பங்களிப்புடன் அனைவரது வெற்றியையும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும் எனத் தெரிவித்தார்.
புத்தாண்டின் முதல் கடமையாக இவ்வாறானதொரு சமூக நலன்புரிச் சேவையை முன்னெடுக்கக் கிடைத்தமை ஓர் ஆசீர்வாதமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, "
வசதி வாய்ப்புகள் உள்ளமை மற்றும் இல்லாமை ஆகிய இரு நிலைகளுக்கும் இடையிலான உணர்வுகளை நான் தனிப்பட்ட ரீதியில் அனுபவித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, உயர்தரமான பாடசாலைக் காலணிகளைப் பாடசாலைகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு விநியோகிப்பது இத்திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் எனவும், இதன் மூலம் அரசாங்கத்திற்குப் பெருமளவிலான நிதி சேமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த ஆண்டிற்குள் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கி மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் திட்டமானது கல்வி அமைச்சு மற்றும் கைத்தொழில், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டதாகும். இந்நிகழ்வில் பங்கேற்ற உள்ளூர் பாடசாலைக் காலணி உற்பத்தியாளர்களுடன் உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிள்ளைகளின் தரமான கல்விக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும் பிரதமர் மீண்டும் உறுதி எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படாத வகையில் கல்வியை உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் எனவும், அதன் போது பிள்ளைகளின் நலன்புரி விடயங்கள் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். மேலும், இது ஒரு பாடசாலை மாணவருக்கு வழங்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மட்டுமல்ல எனவும், ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேல் மற்றும் தென் மாகாணப் பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை விநியோகிப்பதற்கான முன்னோடித் திட்டத்தின் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், இத்திட்டமானது அரசாங்கத்தின் அபிவிருத்திக் கருப்பொருளான 'அரசு, தனியார் துறை மற்றும் மக்கள்' ஆகிய முத்தரப்பினரின் பங்களிப்புடன் அனைவரது வெற்றியையும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும் எனத் தெரிவித்தார். புத்தாண்டின் முதல் கடமையாக இவ்வாறானதொரு சமூக நலன்புரிச் சேவையை முன்னெடுக்கக் கிடைத்தமை ஓர் ஆசீர்வாதமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, "வசதி வாய்ப்புகள் உள்ளமை மற்றும் இல்லாமை ஆகிய இரு நிலைகளுக்கும் இடையிலான உணர்வுகளை நான் தனிப்பட்ட ரீதியில் அனுபவித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, உயர்தரமான பாடசாலைக் காலணிகளைப் பாடசாலைகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு விநியோகிப்பது இத்திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் எனவும், இதன் மூலம் அரசாங்கத்திற்குப் பெருமளவிலான நிதி சேமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், அடுத்த ஆண்டிற்குள் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கி மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் திட்டமானது கல்வி அமைச்சு மற்றும் கைத்தொழில், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டதாகும். இந்நிகழ்வில் பங்கேற்ற உள்ளூர் பாடசாலைக் காலணி உற்பத்தியாளர்களுடன் உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.