நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களுக்குள் கொத்தணிகளாக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தற்போது தேசிய அளவில் டெங்கு தொற்று நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளதாகவும், பல மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை டெங்கு பரவலிலிருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பல்கலைக்கழகங்களில் கொத்தணிகளாக நோயாளர்கள் பதிவானால், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் டெங்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
டெங்கு கொத்தணிகள் ஏற்பட்டால் பல்கலைக்கழகங்கள் மூடப்படலாம் நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களுக்குள் கொத்தணிகளாக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போது தேசிய அளவில் டெங்கு தொற்று நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளதாகவும், பல மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதன் அடிப்படையில் கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை டெங்கு பரவலிலிருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் கொத்தணிகளாக நோயாளர்கள் பதிவானால், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் டெங்கு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.