• Jun 23 2026

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு ஸ்தாபிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

Chithra / Jun 23rd 2026, 6:30 pm
image


அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

 

தெல்கே அசோக பீரிஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், 

அரச ஊழியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையில் எவ்வாறான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆணைக்குழுவை நிறுவியதன் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் ஒரு வருடத்திற்குள் (01 வருடம்) நிறைவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


ஆணைக்குழுவின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குத் தேவையான சகல உதவிகளையும், தகவல்களையும் வழங்க வேண்டும் என அனைத்து அரச அலுவலர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு ஸ்தாபிப்பு - ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  தெல்கே அசோக பீரிஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரச ஊழியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையில் எவ்வாறான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆணைக்குழுவை நிறுவியதன் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் ஒரு வருடத்திற்குள் (01 வருடம்) நிறைவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஆணைக்குழுவின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குத் தேவையான சகல உதவிகளையும், தகவல்களையும் வழங்க வேண்டும் என அனைத்து அரச அலுவலர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement