• May 22 2026

மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்-வடக்கு மாகாண ஆளுநர் !

Ziya / May 22nd 2026, 3:55 pm
image

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இதனை வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.


சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை காலை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இச்சந்திப்பின்போது ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், 


வடக்கு மாகாணத்தின் பொருளாதார முதுகெலும்பாக விவசாயமும் மீன்பிடியுமே விளங்குகின்றன. ஆயினும், விவசாயிகளுக்கோ அல்லது மீனவர்களுக்கோ தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் உள்ள இடர்கள் மற்றும் விலைத் தளம்பல்கள் பிரதான சவாலாக அமைந்துள்ளன. இடைத்தரகர்களே அதிக இலாபமீட்டுபவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றியமைப்பதற்குப் பெறுமதி சேர் உற்பத்தித் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும். இதில் போட்டித்தன்மை ஏற்பட்டாலேயே விவசாயிகளும் மீனவர்களும் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.


வடக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர். இதன்போது விளக்கமளித்த ஆளுநர், 'த மனேஜ்மென்ட் கிளப்' ஊடாக கடந்த ஜனவரி மாதம் வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதில் புலம்பெயர் முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அதேநேரம், தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளால் வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.


மேலும், இங்குள்ள மீனவர்கள் இன்னமும் பாரம்பரிய முறைகளிலேயே கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவர்களுக்குப் பலநாள் மீன்பிடிப் படகுகளை வழங்கி நவீனத்துவத்தை நோக்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


நன்னீர் மீன்பிடியை ஊக்குவிப்பதற்காக மாகாண சபை ஊடாக நிதியுதவி வழங்கப்படுவது குறித்தும், அதனை மேலும் வளப்படுத்துவது தொடர்பிலும் ஆளுநர் இதன்போது தெளிவுபடுத்தினார். இரணைமடுவில் திறந்து வைக்கப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலையம் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். இந்தச் செயற்றிட்டத்தை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம், அதனை ஏனைய மாவட்டங்களுக்கும் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்தும், அதற்கு மாகாண நிர்வாகம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.


இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாலசுந்தரம் சத்தியசீலன், புதுடெல்லியிலுள்ள ரோயல் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் டோர்மோட் நூலண்ட், ரோயல் நோர்வே தூதரகத்தின் சிNர்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி அகன்ஷh, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 'க்ரோ' செயற்றிட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிஹால் தேவகிரி, கள ஒருங்கிணைப்பாளர் வாசுதேவ் மற்றும் தபேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்-வடக்கு மாகாண ஆளுநர் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இதனை வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை காலை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இச்சந்திப்பின்போது ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் பொருளாதார முதுகெலும்பாக விவசாயமும் மீன்பிடியுமே விளங்குகின்றன. ஆயினும், விவசாயிகளுக்கோ அல்லது மீனவர்களுக்கோ தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் உள்ள இடர்கள் மற்றும் விலைத் தளம்பல்கள் பிரதான சவாலாக அமைந்துள்ளன. இடைத்தரகர்களே அதிக இலாபமீட்டுபவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றியமைப்பதற்குப் பெறுமதி சேர் உற்பத்தித் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாக்கப்பட வேண்டும். இதில் போட்டித்தன்மை ஏற்பட்டாலேயே விவசாயிகளும் மீனவர்களும் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.வடக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர். இதன்போது விளக்கமளித்த ஆளுநர், 'த மனேஜ்மென்ட் கிளப்' ஊடாக கடந்த ஜனவரி மாதம் வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதில் புலம்பெயர் முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அதேநேரம், தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைகளால் வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.மேலும், இங்குள்ள மீனவர்கள் இன்னமும் பாரம்பரிய முறைகளிலேயே கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவர்களுக்குப் பலநாள் மீன்பிடிப் படகுகளை வழங்கி நவீனத்துவத்தை நோக்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.நன்னீர் மீன்பிடியை ஊக்குவிப்பதற்காக மாகாண சபை ஊடாக நிதியுதவி வழங்கப்படுவது குறித்தும், அதனை மேலும் வளப்படுத்துவது தொடர்பிலும் ஆளுநர் இதன்போது தெளிவுபடுத்தினார். இரணைமடுவில் திறந்து வைக்கப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலையம் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். இந்தச் செயற்றிட்டத்தை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம், அதனை ஏனைய மாவட்டங்களுக்கும் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்தும், அதற்கு மாகாண நிர்வாகம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாலசுந்தரம் சத்தியசீலன், புதுடெல்லியிலுள்ள ரோயல் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் டோர்மோட் நூலண்ட், ரோயல் நோர்வே தூதரகத்தின் சிNர்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி அகன்ஷh, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 'க்ரோ' செயற்றிட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிஹால் தேவகிரி, கள ஒருங்கிணைப்பாளர் வாசுதேவ் மற்றும் தபேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement