• May 14 2026

'நீல நிற' இன்ஹேலர்களை பயன்படுத்துவது ஆபத்தா? ஆஸ்துமா நோயாளிகளுக்கு எச்சரிக்கை

Chithra / May 14th 2026, 12:11 pm
image

இலங்கையில் உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் பலர், முறையான நீண்டகால சிகிச்சையைப் பெறுவதற்குப் பதிலாக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் ‘நீல நிற’ இன்ஹேலர்களை (Blue Inhalers) மட்டுமே அதிகளவில் சார்ந்திருப்பதாகத் தேசிய சுவாச நோய் மருத்துவமனையின் சுவாச நோய் விசேட மருத்துவ நிபுணர் சமன்மலி தல்பதாது கவலை வெளியிட்டுள்ளார்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


ஆஸ்துமா சிகிச்சைக்காக இலங்கையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதுமான வசதிகள் இருந்தபோதிலும், இன்ஹேலர் பயன்பாடு குறித்த தவறான புரிதல்களால் மரணங்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிகள் அதிகரித்து வருகின்றன.


சல்புடமோல் அடங்கிய நீல நிற இன்ஹேலர்கள், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் போது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. இவை அவசர காலங்களுக்கு மட்டுமேயானவை.


ஆஸ்துமா என்பது சுவாசக் குழாய்களில் ஏற்படும் நீண்டகால வீக்கத்தினால் உண்டாகும் நோயாகும். இதனைத் தடுக்க 'ஸ்டெராய்டு' அடங்கிய இன்ஹேலர்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே சரியான சிகிச்சையாகும்.


ஸ்டெராய்டு இன்ஹேலர்கள் நீல நிற இன்ஹேலரைப் போல உடனடி நிவாரணத்தை வழங்குவதில்லை. இதனால், நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு நோயாளிகள் முறையான மருந்துகளைத் தவிர்க்கின்றனர். இதன் விளைவாக, சுவாசக் குழாய் வீக்கம் அதிகரித்து திடீரெனத் தீவிரமான ஆஸ்துமா தாக்குதல்கள் ஏற்படுகின்றன.


அரசாங்க மருத்துவமனைகளில் இதற்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதுடன், நாட்டில் எவ்வித மருந்துத் தட்டுப்பாடும் நிலவவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கையில் வருடாந்த மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமாவுடன் தொடர்புடையவை என மார்பக சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.எம்.சுமன ஹந்தகல தெரிவித்தார்.


இன்ஹேலர்களைப் பயன்படுத்தினால் உடலில் வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் மக்களிடையே இன்றும் நீடிக்கிறது. புகைபிடித்தல், வீட்டுத் தூசி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலமும், மருத்துவர் பரிந்துரைக்கும் இன்ஹேலர்களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும் ஆஸ்துமா நோயாளிகள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

'நீல நிற' இன்ஹேலர்களை பயன்படுத்துவது ஆபத்தா ஆஸ்துமா நோயாளிகளுக்கு எச்சரிக்கை இலங்கையில் உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் பலர், முறையான நீண்டகால சிகிச்சையைப் பெறுவதற்குப் பதிலாக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் ‘நீல நிற’ இன்ஹேலர்களை (Blue Inhalers) மட்டுமே அதிகளவில் சார்ந்திருப்பதாகத் தேசிய சுவாச நோய் மருத்துவமனையின் சுவாச நோய் விசேட மருத்துவ நிபுணர் சமன்மலி தல்பதாது கவலை வெளியிட்டுள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.ஆஸ்துமா சிகிச்சைக்காக இலங்கையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதுமான வசதிகள் இருந்தபோதிலும், இன்ஹேலர் பயன்பாடு குறித்த தவறான புரிதல்களால் மரணங்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிகள் அதிகரித்து வருகின்றன.சல்புடமோல் அடங்கிய நீல நிற இன்ஹேலர்கள், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் போது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. இவை அவசர காலங்களுக்கு மட்டுமேயானவை.ஆஸ்துமா என்பது சுவாசக் குழாய்களில் ஏற்படும் நீண்டகால வீக்கத்தினால் உண்டாகும் நோயாகும். இதனைத் தடுக்க 'ஸ்டெராய்டு' அடங்கிய இன்ஹேலர்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதே சரியான சிகிச்சையாகும்.ஸ்டெராய்டு இன்ஹேலர்கள் நீல நிற இன்ஹேலரைப் போல உடனடி நிவாரணத்தை வழங்குவதில்லை. இதனால், நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு நோயாளிகள் முறையான மருந்துகளைத் தவிர்க்கின்றனர். இதன் விளைவாக, சுவாசக் குழாய் வீக்கம் அதிகரித்து திடீரெனத் தீவிரமான ஆஸ்துமா தாக்குதல்கள் ஏற்படுகின்றன.அரசாங்க மருத்துவமனைகளில் இதற்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதுடன், நாட்டில் எவ்வித மருந்துத் தட்டுப்பாடும் நிலவவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில் வருடாந்த மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமாவுடன் தொடர்புடையவை என மார்பக சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.எம்.சுமன ஹந்தகல தெரிவித்தார்.இன்ஹேலர்களைப் பயன்படுத்தினால் உடலில் வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் மக்களிடையே இன்றும் நீடிக்கிறது. புகைபிடித்தல், வீட்டுத் தூசி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலமும், மருத்துவர் பரிந்துரைக்கும் இன்ஹேலர்களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும் ஆஸ்துமா நோயாளிகள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement