திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
களுதாவளை கடற்கரை வீதி சந்திக்கு அருகில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த கோழி விற்பனை நிலையம் ஒன்றில் மோதியதில், குறித்த கடை சேதமடைந்துள்ளது.
விபத்தில் எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கோழி விற்பனை நிலையத்துக்குள் புகுந்த பேருந்து; முந்திச் செல்ல முயன்றதால் பரபரப்பு திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.களுதாவளை கடற்கரை வீதி சந்திக்கு அருகில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இரு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த கோழி விற்பனை நிலையம் ஒன்றில் மோதியதில், குறித்த கடை சேதமடைந்துள்ளது.விபத்தில் எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.