• Sep 30 2026

நள்ளிரவில் உலாவும் உருவம்! மன்னார்–வவுனியா வீதியில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Sep 30th 2026, 12:22 pm
image


மன்னார்–வவுனியா வீதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் செல்லும் பாதையில் அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. 


இந்நிலையில் இதுதொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அதன்படி மடுத்  தேவாலயத்திலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் குறிப்பாக இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான நேரத்திலேயே சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, குறித்த சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இரவு நேரங்களில் குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும், சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவில் உலாவும் உருவம் மன்னார்–வவுனியா வீதியில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை மன்னார்–வவுனியா வீதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் செல்லும் பாதையில் அண்மைக்காலமாக நடக்கும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி மடுத்  தேவாலயத்திலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் குறிப்பாக இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான நேரத்திலேயே சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, குறித்த சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இரவு நேரங்களில் குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement