• Oct 30 2026

கந்தளாயில் காணி உரிமையை உறுதிப்படுத்தும் காணி அனுமதி பத்திரங்களுக்கான முதற்கட்ட நடவடிக்கை!

Aathira / Oct 30th 2026, 7:40 am
image

கந்தளாய் நகரம், கந்தளாய் நகரம் தெற்கு, பாதியகம மற்றும் பேராறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், காணி ஆவணங்களை கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று (29) கந்தளாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, இதற்கான ஆவணங்களைக் கையளித்தனர்.

இதன் போது 45 பயனாளிகளுக்கு, காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கந்தளாய் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜீ. எம். ஹேமந்த குமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இது முக்கியமானதொரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


கந்தளாயில் காணி உரிமையை உறுதிப்படுத்தும் காணி அனுமதி பத்திரங்களுக்கான முதற்கட்ட நடவடிக்கை கந்தளாய் நகரம், கந்தளாய் நகரம் தெற்கு, பாதியகம மற்றும் பேராறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், காணி ஆவணங்களை கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வு நேற்று (29) கந்தளாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, இதற்கான ஆவணங்களைக் கையளித்தனர்.இதன் போது 45 பயனாளிகளுக்கு, காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.கந்தளாய் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜீ. எம். ஹேமந்த குமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இது முக்கியமானதொரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement