சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அவர்கள் இன்று (28) முற்பகல் ஊர்காவற்றுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இன்றைய நிலவரப்படி, தமிழகத்தை சேர்ந்த 52 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 249 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 படகுடன் 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எல்லைத்தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவர்கள் இன்று (28) முற்பகல் ஊர்காவற்றுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.மேலும் இன்றைய நிலவரப்படி, தமிழகத்தை சேர்ந்த 52 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 249 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 படகுடன் 344 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.