• Apr 18 2026

இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை!

shanu / Mar 7th 2026, 1:51 pm
image

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.


அஹமதாபத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுவது இது இரண்டாவது முறையாகும்.


அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் மைய ஆடுகளம், சிவப்பு மற்றும் கருப்பு மண் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பந்து எழும்புதலை வழங்கக்கூடியது.


200 ஓட்டங்கள் என்பது இந்த மைதானத்தில் பாதுகாப்பான இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடுகளம் புதிதாகத் தயார் செய்யப்பட்டுள்ளது


கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதிக்குப் பிறகு எந்தப் போட்டியும் இந்த ஆடுகளத்தில் நடத்தப்படவில்லை. இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் இரு அணிகளுக்கும் உண்டு.


இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2025 செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை வென்றிருந்தது.


அந்தப் பெருமையைத் தக்கவைக்க இந்தியா முனைப்பு காட்டும் நிலையில், உலகக் கிண்ணத்தை வென்று பதிலடி கொடுக்க நியூசிலாந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.அஹமதாபத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுவது இது இரண்டாவது முறையாகும்.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் மைய ஆடுகளம், சிவப்பு மற்றும் கருப்பு மண் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பந்து எழும்புதலை வழங்கக்கூடியது.200 ஓட்டங்கள் என்பது இந்த மைதானத்தில் பாதுகாப்பான இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடுகளம் புதிதாகத் தயார் செய்யப்பட்டுள்ளதுகடந்த பெப்ரவரி 9 ஆம் திகதிக்குப் பிறகு எந்தப் போட்டியும் இந்த ஆடுகளத்தில் நடத்தப்படவில்லை. இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் இரு அணிகளுக்கும் உண்டு.இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2025 செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை வென்றிருந்தது.அந்தப் பெருமையைத் தக்கவைக்க இந்தியா முனைப்பு காட்டும் நிலையில், உலகக் கிண்ணத்தை வென்று பதிலடி கொடுக்க நியூசிலாந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Advertisement

Advertisement

Advertisement