நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த திங்கட்கிழமை இலங்கையின் வரலாற்றில் அதிகப்படியான மின்சாரத் தேவை பதிவாகியுள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது தொடர்ந்து 3,000 மெகாவோட் அளவிலேயே பதிவாகி வருகின்றது.
அன்றைய தினம் 60.56 ஜிகாவோட் மணித்தியால மின்சாரம் நுகரப்பட்டுள்ளதுடன், தற்போது அது 58-59 ஜிகாவோட் மணித்தியால மட்டத்தில் காணப்படுகிறது.
வறண்ட வானிலை மற்றும் எரிபொருள் சவால்கள் நிலவிய போதிலும், மின்சார உற்பத்திக்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.
இதன் காரணமாக நாட்டில் தற்போது மின்வெட்டு எதனையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பொதுமக்களுக்குத் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத் தேவை அதிகரித்து வருவதால், நாட்டின் நலன் கருதி மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அனைத்து நுகர்வோரிடமும் கலாநிதி பிரதீப் பெரெரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் மின்சாரத் தேவை அதிகரிப்பு: பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த திங்கட்கிழமை இலங்கையின் வரலாற்றில் அதிகப்படியான மின்சாரத் தேவை பதிவாகியுள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த திங்கட்கிழமை மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது தொடர்ந்து 3,000 மெகாவோட் அளவிலேயே பதிவாகி வருகின்றது.அன்றைய தினம் 60.56 ஜிகாவோட் மணித்தியால மின்சாரம் நுகரப்பட்டுள்ளதுடன், தற்போது அது 58-59 ஜிகாவோட் மணித்தியால மட்டத்தில் காணப்படுகிறது.வறண்ட வானிலை மற்றும் எரிபொருள் சவால்கள் நிலவிய போதிலும், மின்சார உற்பத்திக்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.இதன் காரணமாக நாட்டில் தற்போது மின்வெட்டு எதனையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பொதுமக்களுக்குத் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.மின்சாரத் தேவை அதிகரித்து வருவதால், நாட்டின் நலன் கருதி மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அனைத்து நுகர்வோரிடமும் கலாநிதி பிரதீப் பெரெரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.