• Jul 26 2026

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு 10 இலட்சம் அபராதம்

Chithra / Jul 26th 2026, 3:35 pm
image


எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த நிறுவனம் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டது.


இதனையடுத்து, நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் வழக்குத் தாக்கல் செய்தது.


இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.


இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு 10 இலட்சம் அபராதம் எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த நிறுவனம் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டது.இதனையடுத்து, நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் வழக்குத் தாக்கல் செய்தது.இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement