• May 14 2026

வவுனியாவில் வெசாக் வாரத்தை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், மதுபானசாலைகள் பூட்டு

Chithra / May 14th 2026, 9:28 pm
image

எதிர்வரும் வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தினால் 2026 மே மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு அங்கமாக, நாடு தழுவிய ரீதியில் மே 30, மே 31 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டும், மதுபான சாலைகள் அனைத்தும் இயங்க தடை, பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) இறைச்சி விற்பனை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இந்த அறிவுறுத்தலுக்கு அமைய, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சபையின் தீர்மானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


வவுனியாவில் வெசாக் வாரத்தை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், மதுபானசாலைகள் பூட்டு எதிர்வரும் வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் 2026 மே மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஒரு அங்கமாக, நாடு தழுவிய ரீதியில் மே 30, மே 31 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்பட வேண்டும், மதுபான சாலைகள் அனைத்தும் இயங்க தடை, பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) இறைச்சி விற்பனை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த அறிவுறுத்தலுக்கு அமைய, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சபையின் தீர்மானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement