• Oct 30 2026

இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் 02 முதல் விசேட வேலைத்திட்டம்!

Chithra / Oct 30th 2026, 10:30 am
image


இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், சுமார் 1,000 பெண்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைக் கருத்திற்கொண்டு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மாவட்ட மற்றும் தொகுதி மட்டங்களில் சுகாதார முகாம்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளன.


மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், அடுத்த ஆண்டு 35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் 02 முதல் விசேட வேலைத்திட்டம் இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், சுமார் 1,000 பெண்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைக் கருத்திற்கொண்டு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மாவட்ட மற்றும் தொகுதி மட்டங்களில் சுகாதார முகாம்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளன.மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த ஆண்டு 35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement