• Apr 19 2026

வாக்குமூலம் வழங்க வராவிட்டால் ஜோன்ஸ்டனுக்கு எதிராக பிடியாணை!

Chithra / Jan 5th 2026, 9:26 am
image


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோவை  நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

 

மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே, அவருக்கு இந்த அறிவித்த விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸின்  நிதிகுற்ற விசாரணைப் பிரிவுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

 

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில், ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

அந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், ஜொஹான் பெர்னாண்டோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். 

 

அத்துடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன், நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 


வாக்குமூலம் வழங்க வராவிட்டால் ஜோன்ஸ்டனுக்கு எதிராக பிடியாணை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ட்ன் பெர்னாண்டோவை  நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.  மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே, அவருக்கு இந்த அறிவித்த விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸின்  நிதிகுற்ற விசாரணைப் பிரிவுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில், ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், ஜொஹான் பெர்னாண்டோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.  அத்துடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன், நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement