• Oct 08 2026

கண்டியில் பயங்கரம்! வீட்டுக்குள் தம்பதி கொடூர கொலை – பின்னணியில் அதிர்ச்சி

Chithra / Oct 7th 2026, 11:51 am
image


கண்டி - உடுநுவர, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கஅத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கணவன், மனைவி இருவரும்  கொலை செய்யப்பட்டுள்ளனர்.


கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தப் பகுதியில் வசித்து வந்த 68 மற்றும் 75 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வீட்டுக்குள் வைத்து இருவரையும் கொலை செய்த பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணித் தகராறு ஒன்றின் காரணமாக இந்தக் கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலம்பொடப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டியில் பயங்கரம் வீட்டுக்குள் தம்பதி கொடூர கொலை – பின்னணியில் அதிர்ச்சி கண்டி - உடுநுவர, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கஅத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கணவன், மனைவி இருவரும்  கொலை செய்யப்பட்டுள்ளனர்.கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பகுதியில் வசித்து வந்த 68 மற்றும் 75 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.வீட்டுக்குள் வைத்து இருவரையும் கொலை செய்த பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணித் தகராறு ஒன்றின் காரணமாக இந்தக் கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலம்பொடப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement