• Apr 19 2026

கந்தளாயில் ஏற்பட்ட கனமழை - வடிகால்கள் துப்பரவுப் பணி தீவிரம்!

shanu / Nov 26th 2025, 5:52 pm
image

கந்தளாய் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, பேராறு இரண்டாம் கொலனி, மூன்றாம் கொலனி, மற்றும் மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


வடிகால்களில் நீர் நிரம்பி வழிவதனால், ஒரு சில பகுதிகளில் வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதிகளில் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக, கந்தளாய் பிரதேச சபையூடாகப் பேராறு வடிகான்களைச் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


பேராறு மேற்கு அமைப்பாளர் ஏ.எம். அலீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த துப்பரவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது, கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.எம். பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டு பணிகளை மேற்பார்வையிட்டார்.


தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கந்தளாயில் ஏற்பட்ட கனமழை - வடிகால்கள் துப்பரவுப் பணி தீவிரம் கந்தளாய் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, பேராறு இரண்டாம் கொலனி, மூன்றாம் கொலனி, மற்றும் மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வடிகால்களில் நீர் நிரம்பி வழிவதனால், ஒரு சில பகுதிகளில் வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதிகளில் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக, கந்தளாய் பிரதேச சபையூடாகப் பேராறு வடிகான்களைச் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.பேராறு மேற்கு அமைப்பாளர் ஏ.எம். அலீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த துப்பரவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது, கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.எம். பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டு பணிகளை மேற்பார்வையிட்டார்.தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement