• May 29 2026

இலங்கையில் சிறப்பாக நடந்த ஹஜ் பெருநாள் தொழுகை; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Chithra / May 28th 2026, 2:51 pm
image

இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (28) கொண்டாடுகின்றனர். 


கந்தளாய்


அதன்படி, ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் பேராற்று வேலி ஜும்மா பள்ளிவாயல்களில் இன்று காலை 6.30 மணியளவில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.


இலாஹியா ஜும்மா பள்ளிவாயலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவம் மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகளை எடுத்துரைக்கும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.


மேலும், நாட்டில் நிரந்தர சமாதானமும் நிலையான அபிவிருத்தியும் நிலவ வேண்டுமென இறைவனிடம் விசேட துஆ பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.


தொழுகைக்காக  கந்தளாய்  சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையைத் தொடர்ந்து, மக்கள் ஒருவருக்கொருவர் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.


வவுனியா


​தௌபீக் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில், ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்று காலை வவுனியா, பட்டாணிச்சூர் 05ம் ஒழுங்கை குடா வயல் திடலில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

​மௌலவி ஆசீஸ் அரபாத் தலைமையில் இவ்விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.


​இவ்விசேட தொழுகையில் பட்டானிச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றினர். 


 கிளிநொச்சி


புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று கிளிநொச்சி நகரில் உள்ள ஸாலாம் ஜிம்மா பள்ளியில் அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது. குறித்த தொழுகைக்கு அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கிண்ணியா


புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று அதிகாலை கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை ஏற்பாட்டில் இடம்பெற்ற இத் தொழுகைக்கு அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். 


தொழுகையையும் ஜும்ஆ பிரசங்கத்தையும் அஸ்-ஸெய்ஹ் மௌலவி எஸ். எம். முனீர் பலாஹி நடாத்திவைத்தார்.

 

கிண்ணியா குறிஞ்சாக்கேணி VC மைதானத்திலும்  ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.


இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களும் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.


மன்னார்


மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.


அஷ்ஷெய்க் T.M. தஸ்னீம் மௌலவி தலைமையில் குறித்த திடல் தொழுகை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 'இறைத்தூதரின் தியாகம்' எனும் தலைப்பில்  பெருநாள் பிரசங்கம் இடம்பெற்றது.


 மூதூர் 


ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (28) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.இதனை மூதூர் அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.


அதிகளவான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டதோடு தங்களுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதையும் காணமுடிந்தது. 


 புத்தளம்


புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பாவும் இன்று காலை (28) 06.15 மணிக்கு புத்தளம் சாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


பெருநாள் குத்பாவையும், தொழுகையையும் புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி நடத்தி வைத்தார். 


புத்தளம்  - உடப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகை நிகழ்வுகள் இன்று (28) வியாழக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றன.


மருதமுனை


மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று  காலை இடம்பெற்றது.


மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில்   நடத்திய இந்த ஹஜ்ஜுப் பெருநாள்  தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கம் என்பவற்றை  மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி நிகழ்த்தினார்கள்.


கொழும்பு


கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.


இன்று காலை நடைபெற்ற இந்த விசேட பெருநாள் தொழுகையையும், அதனைத் தொடர்ந்த குத்பா மார்க்கச் சொற்பொழிவினையும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இமாம் மௌலவி எஸ்.எம்.றிஸ்வான் (பஹ்ஜி) அவர்கள் முன்னின்று நடாத்தினார். 


அவர் தனது பிரசங்கத்தின் போது, ஹஜ் பெருநாளின் பின்னணியில் உள்ள தியாகத்தின் முக்கியத்துவம், மனிதநேயம், சகிப்புத்தன்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் குறித்துப் பேசி, தற்போதைய சூழலில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


தலைநகரின் முக்கிய ஆன்மீக மையமாக விளங்கும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இத்தொழுகையில், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.  



இலங்கையில் சிறப்பாக நடந்த ஹஜ் பெருநாள் தொழுகை; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (28) கொண்டாடுகின்றனர். கந்தளாய்அதன்படி, ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் பேராற்று வேலி ஜும்மா பள்ளிவாயல்களில் இன்று காலை 6.30 மணியளவில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.இலாஹியா ஜும்மா பள்ளிவாயலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவம் மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகளை எடுத்துரைக்கும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.மேலும், நாட்டில் நிரந்தர சமாதானமும் நிலையான அபிவிருத்தியும் நிலவ வேண்டுமென இறைவனிடம் விசேட துஆ பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.தொழுகைக்காக  கந்தளாய்  சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையைத் தொடர்ந்து, மக்கள் ஒருவருக்கொருவர் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.வவுனியா​தௌபீக் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில், ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்று காலை வவுனியா, பட்டாணிச்சூர் 05ம் ஒழுங்கை குடா வயல் திடலில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.​மௌலவி ஆசீஸ் அரபாத் தலைமையில் இவ்விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.​இவ்விசேட தொழுகையில் பட்டானிச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.  கிளிநொச்சிபுனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று கிளிநொச்சி நகரில் உள்ள ஸாலாம் ஜிம்மா பள்ளியில் அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது. குறித்த தொழுகைக்கு அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.கிண்ணியாபுனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று அதிகாலை கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை ஏற்பாட்டில் இடம்பெற்ற இத் தொழுகைக்கு அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். தொழுகையையும் ஜும்ஆ பிரசங்கத்தையும் அஸ்-ஸெய்ஹ் மௌலவி எஸ். எம். முனீர் பலாஹி நடாத்திவைத்தார். கிண்ணியா குறிஞ்சாக்கேணி VC மைதானத்திலும்  ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களும் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.மன்னார்மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.அஷ்ஷெய்க் T.M. தஸ்னீம் மௌலவி தலைமையில் குறித்த திடல் தொழுகை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 'இறைத்தூதரின் தியாகம்' எனும் தலைப்பில்  பெருநாள் பிரசங்கம் இடம்பெற்றது. மூதூர் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (28) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.இதனை மூதூர் அல் ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.அதிகளவான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டதோடு தங்களுக்குள் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதையும் காணமுடிந்தது.  புத்தளம்புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பாவும் இன்று காலை (28) 06.15 மணிக்கு புத்தளம் சாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.பெருநாள் குத்பாவையும், தொழுகையையும் புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி நடத்தி வைத்தார். புத்தளம்  - உடப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகை நிகழ்வுகள் இன்று (28) வியாழக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றன.மருதமுனைமருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று  காலை இடம்பெற்றது.மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில்   நடத்திய இந்த ஹஜ்ஜுப் பெருநாள்  தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கம் என்பவற்றை  மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி நிகழ்த்தினார்கள்.கொழும்புகொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.இன்று காலை நடைபெற்ற இந்த விசேட பெருநாள் தொழுகையையும், அதனைத் தொடர்ந்த குத்பா மார்க்கச் சொற்பொழிவினையும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இமாம் மௌலவி எஸ்.எம்.றிஸ்வான் (பஹ்ஜி) அவர்கள் முன்னின்று நடாத்தினார். அவர் தனது பிரசங்கத்தின் போது, ஹஜ் பெருநாளின் பின்னணியில் உள்ள தியாகத்தின் முக்கியத்துவம், மனிதநேயம், சகிப்புத்தன்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் குறித்துப் பேசி, தற்போதைய சூழலில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.தலைநகரின் முக்கிய ஆன்மீக மையமாக விளங்கும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இத்தொழுகையில், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement