• May 28 2026

களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர் பயன்படுத்திய வாகனங்கள் கண்டுபிடிப்பு

Chithra / May 28th 2026, 3:33 pm
image

களுத்துறை, வெட்டுமகட பகுதியில் தொழிலதிபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார், தெபுவன - நொபட தபால் நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மற்றொரு வாகனம், களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இன்று பகல் வெள்ளை நிற சிறிய ரக வேன் ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த வேன், கொலைச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபர்கள் பயணித்த வாகனம் என்றும், இதிலிருந்தே துப்பாக்கிதாரி பின்னர் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


இன்று (28) காலை களுத்துறை பகுதியில் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.


தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர் பயன்படுத்திய வாகனங்கள் கண்டுபிடிப்பு களுத்துறை, வெட்டுமகட பகுதியில் தொழிலதிபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார், தெபுவன - நொபட தபால் நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மற்றொரு வாகனம், களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் வெள்ளை நிற சிறிய ரக வேன் ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த வேன், கொலைச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபர்கள் பயணித்த வாகனம் என்றும், இதிலிருந்தே துப்பாக்கிதாரி பின்னர் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.இன்று (28) காலை களுத்துறை பகுதியில் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்தவர் நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement