கல்வி அமைச்சராகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தோல்வியடைந்துள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் எதிர்காலமும் நாட்டின் மிகப்பெரிய சொத்தும் பிள்ளைகளே ஆவர். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் மூலம் மாத்திரமே அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என தெற்காசியப் பிராந்தியப் பெற்றோர்கள் நம்புகின்றனர்.
இலவசக் கல்வியின் ஊடாக அந்த வாய்ப்பை வழங்க முடியும் என்பதுடன், இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி முறையானது நவீன உலகிற்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இயலாமையினால் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்கள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுற்றுலா அமைச்சின் ஊடாக மற்றுமொரு நிறுவனத்திற்கு ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க எழுத்துப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மதத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து அரசாங்கம் அதனை மீளப் பெற்றுக்கொண்டது.
மேலும், 'தித்வா' சூறாவளிக்கு பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், தண்டனைச் சட்டக்கோவையில் உள்ள ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 6 ஆம் தர ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக பாலியல் கல்வி என்பது சுகாதார அல்லது விஞ்ஞானப் பாடங்களிலேயே கற்பிக்கப்படும்.
ஆனால் ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவது வழமையல்ல.
இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவுகள் குறித்து கற்பிக்கப்படுவதைத் தாண்டி, இவ்வாறான விடயங்களை 5 இலட்சம் புத்தகங்களில் அச்சிட்டு விநியோகிக்கத் தயாராக இருந்தபோது, உலப்பனே தேரர் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்துவதாகக் கூறினாலும், கல்வி அமைச்சர் அந்தப் பதவியிலிருந்து விலகியே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பு வாய்ந்தவர்கள் தவறிழைத்தால் பதவியிலிருந்து விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பார்கள் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது ரவி கருணாநாயக்க மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தம்மீதான குற்றச்சாட்டுகளின் போது பதவிகளைத் துறந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சராகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தோல்வியடைந்துள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த தவறுக்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி பதவியிலிருந்து விலக வேண்டும்.
அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து இந்த பிரேரணையைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
அமைச்சர் பதவியில் இருந்து விலகி சுயாதீன விசாரணைக்கு வழிவிடாவிட்டால், இந்தத் தவறுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரவையின் தலைவராகப் பிரதமர் பதவி விலகினால் முழு அமைச்சரவையும் பதவி விலக நேரிடும் என்பதால், குறைந்தபட்சம் கல்வி அமைச்சர் பதவியிலிருந்தாவது அவர் விலக வேண்டும்.
நாட்டு மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாக்கவும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பயன்படுத்தப்படும்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைய வேண்டும் என இரு தரப்பு ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு சஜித் பிரேமதாசவிற்கு வழங்கியுள்ளது.
இரு கட்சிகளின் கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதால், இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
சஜித் பிரேமதாச இந்த வேலைத்திட்டத்தை ஒரு சாதகமான நிலைக்குக் கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் தோல்வி: கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி போர்க்கொடி கல்வி அமைச்சராகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தோல்வியடைந்துள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,இலங்கையின் எதிர்காலமும் நாட்டின் மிகப்பெரிய சொத்தும் பிள்ளைகளே ஆவர். பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் மூலம் மாத்திரமே அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என தெற்காசியப் பிராந்தியப் பெற்றோர்கள் நம்புகின்றனர். இலவசக் கல்வியின் ஊடாக அந்த வாய்ப்பை வழங்க முடியும் என்பதுடன், இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி முறையானது நவீன உலகிற்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இயலாமையினால் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்கள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.தற்போதைய அரசாங்கம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுற்றுலா அமைச்சின் ஊடாக மற்றுமொரு நிறுவனத்திற்கு ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க எழுத்துப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மதத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து அரசாங்கம் அதனை மீளப் பெற்றுக்கொண்டது. மேலும், 'தித்வா' சூறாவளிக்கு பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், தண்டனைச் சட்டக்கோவையில் உள்ள ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் 6 ஆம் தர ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக பாலியல் கல்வி என்பது சுகாதார அல்லது விஞ்ஞானப் பாடங்களிலேயே கற்பிக்கப்படும். ஆனால் ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவது வழமையல்ல. இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவுகள் குறித்து கற்பிக்கப்படுவதைத் தாண்டி, இவ்வாறான விடயங்களை 5 இலட்சம் புத்தகங்களில் அச்சிட்டு விநியோகிக்கத் தயாராக இருந்தபோது, உலப்பனே தேரர் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்துவதாகக் கூறினாலும், கல்வி அமைச்சர் அந்தப் பதவியிலிருந்து விலகியே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பு வாய்ந்தவர்கள் தவறிழைத்தால் பதவியிலிருந்து விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பார்கள் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது ரவி கருணாநாயக்க மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தம்மீதான குற்றச்சாட்டுகளின் போது பதவிகளைத் துறந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சராகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தோல்வியடைந்துள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த தவறுக்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி பதவியிலிருந்து விலக வேண்டும். அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து இந்த பிரேரணையைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.அமைச்சர் பதவியில் இருந்து விலகி சுயாதீன விசாரணைக்கு வழிவிடாவிட்டால், இந்தத் தவறுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரவையின் தலைவராகப் பிரதமர் பதவி விலகினால் முழு அமைச்சரவையும் பதவி விலக நேரிடும் என்பதால், குறைந்தபட்சம் கல்வி அமைச்சர் பதவியிலிருந்தாவது அவர் விலக வேண்டும். நாட்டு மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாக்கவும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பயன்படுத்தப்படும்.அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைய வேண்டும் என இரு தரப்பு ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு சஜித் பிரேமதாசவிற்கு வழங்கியுள்ளது.இரு கட்சிகளின் கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதால், இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. சஜித் பிரேமதாச இந்த வேலைத்திட்டத்தை ஒரு சாதகமான நிலைக்குக் கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.