இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு,
இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
பணியாளர்களுக்கான மொத்த நஷ்டஈட்டுத் தொகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து வழங்க அரசு தீர்மானித்துள்ளது:
திறைசேரி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகை வரும் மார்ச் மாதம் 15-ஆம் திகதிக்குள் ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குறுகிய காலத்திற்குள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்திற்குள் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு, 6 புதிய நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்ட போது, சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த மார்ச் 09 அன்று விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் விலகினர். உரிய நஷ்டஈடு மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்ததால், ஊழியர் சங்கங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்திருந்தன.
தற்போது அமைச்சரின் இந்த அறிவிப்பின் மூலம், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார சபை ஊழியர்களுக்கு நற்செய்தி: மார்ச் 15க்குள் முதற்கட்ட நஷ்டஈடு வழங்கப்படும் இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.பணியாளர்களுக்கான மொத்த நஷ்டஈட்டுத் தொகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து வழங்க அரசு தீர்மானித்துள்ளது:திறைசேரி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை வரும் மார்ச் மாதம் 15-ஆம் திகதிக்குள் ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குறுகிய காலத்திற்குள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வாரத்திற்குள் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு, 6 புதிய நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்ட போது, சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த மார்ச் 09 அன்று விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் விலகினர். உரிய நஷ்டஈடு மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்ததால், ஊழியர் சங்கங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்திருந்தன.தற்போது அமைச்சரின் இந்த அறிவிப்பின் மூலம், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.