• Apr 26 2026

பெருந்தோட்ட மக்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!

shanu / Feb 28th 2026, 8:21 pm
image

மஸ்கெலியாவில் பெருந்தோட்ட மக்களுக்கு  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 


மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தூர பெருந்தோட்ட பிரதேசத்திலிருந்து மஸ்கெலியா நகருக்கு வந்து ஆயுர்வேத மருத்துவத்தை பெற முடியாதவர்களுக்கு இலவச மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


குறித்த மக்களுக்கு  ஆயுர்வேத மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் குறித்த இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தார். 


நேற்று முன்தினம் மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தில் உள்ள தம்பேத்தன பிரிவில் உள்ள வட்டார மக்களுக்காக மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமாரும்  அந்த வட்டாரத்தில் உள்ள பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் சபையின் செயலாளர் ஆகியோர் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யபட்டு சிறப்பாக இடம்பெற்றது.


நிகழ்வில் அந்த வட்டாரத்தில் உள்ள காட்மோர் தனியார் தோட்டத்தில் உள்ள ஏழு பிரிவில் உள்ள நோயாளிகள் மொக்கா தோட்ட நான்கு பிரிவுகளில் உள்ள நோயாளிகள் டீசைட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் உள்ள நோயாளிகள் 300 கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

பெருந்தோட்ட மக்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மஸ்கெலியாவில் பெருந்தோட்ட மக்களுக்கு  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தூர பெருந்தோட்ட பிரதேசத்திலிருந்து மஸ்கெலியா நகருக்கு வந்து ஆயுர்வேத மருத்துவத்தை பெற முடியாதவர்களுக்கு இலவச மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மக்களுக்கு  ஆயுர்வேத மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் குறித்த இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தில் உள்ள தம்பேத்தன பிரிவில் உள்ள வட்டார மக்களுக்காக மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமாரும்  அந்த வட்டாரத்தில் உள்ள பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் சபையின் செயலாளர் ஆகியோர் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யபட்டு சிறப்பாக இடம்பெற்றது.நிகழ்வில் அந்த வட்டாரத்தில் உள்ள காட்மோர் தனியார் தோட்டத்தில் உள்ள ஏழு பிரிவில் உள்ள நோயாளிகள் மொக்கா தோட்ட நான்கு பிரிவுகளில் உள்ள நோயாளிகள் டீசைட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் உள்ள நோயாளிகள் 300 கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement