• May 19 2026

பாகிஸ்தானில் ஐந்து பொலிஸார் சரமாரியாக சுட்டுக்கொலை; வாகனத்திற்குத் தீ வைத்துவிட்டு தப்பிஓடிய துப்பாகிதாரிகள்

Chithra / Dec 23rd 2025, 8:01 pm
image


பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கராக் (Karak) மாவட்டத்தில், மர்ம நபர்கள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

கராக் மாவட்டத்தில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

அடையாளம் தெரியாத ஆயுததாரிகள், பொலிஸாரின் வாகனத்தை வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

 

துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து, தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்த வாகனத்திற்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

 

இதுவரை இச்சம்பவத்திற்கு எந்தவித அமைப்போ அல்லது இயக்கமோ பொறுப்பேற்கவில்லை. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியுமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

இம்மாத தொடக்கத்தில் டெரா இஸ்மாயில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் ஐந்து பொலிஸார் சரமாரியாக சுட்டுக்கொலை; வாகனத்திற்குத் தீ வைத்துவிட்டு தப்பிஓடிய துப்பாகிதாரிகள் பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கராக் (Karak) மாவட்டத்தில், மர்ம நபர்கள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கராக் மாவட்டத்தில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  அடையாளம் தெரியாத ஆயுததாரிகள், பொலிஸாரின் வாகனத்தை வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து, தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்த வாகனத்திற்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  இதுவரை இச்சம்பவத்திற்கு எந்தவித அமைப்போ அல்லது இயக்கமோ பொறுப்பேற்கவில்லை. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறியுமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.  இம்மாத தொடக்கத்தில் டெரா இஸ்மாயில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement