• Oct 04 2026

அனோஜனுக்காக கொழும்பில் உண்ணாவிரதம் - கருணை காட்டுமா சவூதி?

Chithra / Oct 4th 2026, 1:02 pm
image



சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் சவூதி மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் இடம்பெற்று வருகிறது. 


மரண தண்டனை விளிம்பில் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  சிவராசா அனோஜனை சவூதி அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்போராட்டம் நடத்தப்படுகின்றது. 


மேலும் இலங்கை அரசாங்கம், தமிழ், இஸ்லாமிய மற்றும் பௌத்த அமைப்புகள் அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கும் நோக்கிலேயே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம், 

 

கொழும்பில் வாழும் தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களும் நேரில் வருகை தந்து இந்த அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.


அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


 இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எனவே, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனோஜனுக்காக கொழும்பில் உண்ணாவிரதம் - கருணை காட்டுமா சவூதி சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் சவூதி மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் இடம்பெற்று வருகிறது. மரண தண்டனை விளிம்பில் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  சிவராசா அனோஜனை சவூதி அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்போராட்டம் நடத்தப்படுகின்றது. மேலும் இலங்கை அரசாங்கம், தமிழ், இஸ்லாமிய மற்றும் பௌத்த அமைப்புகள் அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கும் நோக்கிலேயே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம்,  கொழும்பில் வாழும் தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களும் நேரில் வருகை தந்து இந்த அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எனவே, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement