• Oct 29 2026

இன்று அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த யானைகள் – தோப்பூரில் விவசாயிகள் கண்ணீர்!

Chithra / Oct 28th 2026, 12:16 pm
image


திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம் வயல்வெளிக்குள் புகுந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.


இன்று (28) புதன்கிழமை அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகள், சுமார் 15 நாட்களேயான இளம் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


விவசாய உபகரணங்கள், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை இவ்வாறு காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


குறிப்பாக, அதிக செலவுகளைச் செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே அழிக்கப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்நிலையில், காட்டு யானைகளின் அட்டகாசத்திலிருந்து தங்களது விவசாய நிலங்களையும் பயிர்களையும் பாதுகாப்பதற்காக பம்மான்குளம் பகுதியில் யானைத் தடுப்பு மின்வேலியை அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான பயிர்ச் சேதங்களைத் தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த யானைகள் – தோப்பூரில் விவசாயிகள் கண்ணீர் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம் வயல்வெளிக்குள் புகுந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.இன்று (28) புதன்கிழமை அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகள், சுமார் 15 நாட்களேயான இளம் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.விவசாய உபகரணங்கள், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை இவ்வாறு காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.குறிப்பாக, அதிக செலவுகளைச் செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே அழிக்கப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில், காட்டு யானைகளின் அட்டகாசத்திலிருந்து தங்களது விவசாய நிலங்களையும் பயிர்களையும் பாதுகாப்பதற்காக பம்மான்குளம் பகுதியில் யானைத் தடுப்பு மின்வேலியை அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான பயிர்ச் சேதங்களைத் தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement