மாரவில - துங்கன்னாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் துங்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அயல்வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அயல்வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் படுகொலை மாரவில - துங்கன்னாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் துங்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.அயல்வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.