இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று சைபர் (Cyber) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அத்துமீறிய இணையத் தாக்குதல் காரணமாக, பொதுமக்கள் ரயில்களின் நேர அட்டவணைகள் மற்றும் பயண விபரங்களை அறிந்துகொள்ளும் முக்கிய பகுதி (Train Schedule Section) தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது.
இதனால் இணையத்தளம் வழியே நேர விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, முடங்கியுள்ள இணையத்தளப் பக்கத்தை மிக விரைவாக மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான தீவிரப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சேவைகள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று சைபர் (Cyber) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அத்துமீறிய இணையத் தாக்குதல் காரணமாக, பொதுமக்கள் ரயில்களின் நேர அட்டவணைகள் மற்றும் பயண விபரங்களை அறிந்துகொள்ளும் முக்கிய பகுதி (Train Schedule Section) தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது. இதனால் இணையத்தளம் வழியே நேர விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இதேவேளை, முடங்கியுள்ள இணையத்தளப் பக்கத்தை மிக விரைவாக மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான தீவிரப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சேவைகள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.