• Sep 11 2026

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

Chithra / Sep 11th 2026, 4:03 pm
image


திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் சுகாதார நிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுகாதாரத் தரம் குறைபாடுடையதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொதுசுகாதார பரிசோதகரால் மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து சிற்றுண்டிச்சாலையை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுமாறு மூதூர் நீதவான் U. வசீம் அஹமட் (10) உத்தரவிட்டுள்ளார்.


மேலும், ஒரு வாரத்தின் பின்னர் குறித்த சிற்றுண்டிச்சாலையின் சுகாதார நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொதுசுகாதார பரிசோதகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் சுகாதார நிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுகாதாரத் தரம் குறைபாடுடையதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொதுசுகாதார பரிசோதகரால் மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து சிற்றுண்டிச்சாலையை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுமாறு மூதூர் நீதவான் U. வசீம் அஹமட் (10) உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஒரு வாரத்தின் பின்னர் குறித்த சிற்றுண்டிச்சாலையின் சுகாதார நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொதுசுகாதார பரிசோதகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement