• May 16 2026

இலங்கைக்கு தொடர்ந்தும் வலுவான ஆதரவு - IMF மீண்டும் உறுதி

IMF
Chithra / May 15th 2026, 8:37 am
image

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 


நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிடுகையில், 


அண்மைக்காலங்களில் இலங்கை பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்திய இரண்டு பாரிய அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 


அவற்றில் முதலாவது “டித்வா” புயல் என்றும், இது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இயற்கை அனர்த்தம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


இரண்டாவது அதிர்ச்சியாக, மத்திய கிழக்கு போரின் தொடர்ச்சியான தாக்கம் பற்றி அவர் சுட்டிக்காட்டினார். 


இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் மக்களும் பொருளாதாரமும் விதிவிலக்கான மீளெழும் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக  தெரிவித்தார். 


சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


அதிகாரிகளின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரச் செயல்பாடு மேம்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்  கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில் கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும்  இந்த நடவடிக்கை நாட்டிற்கு சுமார் 700 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற்றுத் தரக்கூடும் என்றும் தெரிவித்தார். 


இலங்கைக்கு தொடர்ந்தும் வலுவான ஆதரவு - IMF மீண்டும் உறுதி இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிடுகையில், அண்மைக்காலங்களில் இலங்கை பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்திய இரண்டு பாரிய அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றில் முதலாவது “டித்வா” புயல் என்றும், இது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இயற்கை அனர்த்தம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரண்டாவது அதிர்ச்சியாக, மத்திய கிழக்கு போரின் தொடர்ச்சியான தாக்கம் பற்றி அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் மக்களும் பொருளாதாரமும் விதிவிலக்கான மீளெழும் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக  தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிகாரிகளின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரச் செயல்பாடு மேம்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்  கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில் கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும்  இந்த நடவடிக்கை நாட்டிற்கு சுமார் 700 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற்றுத் தரக்கூடும் என்றும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement