• Apr 30 2026

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - கட்டளைக்காக திகதி குறிப்பு!

Chithra / Apr 30th 2026, 7:32 pm
image

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கட்டளைக்காக மே மாதம் 29 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று(29) எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றக் கட்டளை தயாராக இல்லை என தெரிவித்து நீதவான் கட்டளைக்காக வழக்கை தவணையிட்டார்.


யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர் விகாரையில் குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமியை மார்ச் மாதம் 28 திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என அவரது தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதனையடுத்து குறித்த பிக்குவை மார்ச் மாதம் 29 ஆம் திகதி கைது செய்த  பொலிஸார், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.


அதனையடுத்து சாவகச்சேரி நீதிமன்றம், பிக்குவை தொடர்ந்து  விளக்கமறியில் வைத்து பின்னர்  நிபந்தனைப் பிணைகளின் அடிப்படையில் விடுவித்திருந்தது.


அந்த வழக்கில் பாதிக்கப்படவர்கள் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆஜராகியிருந்தார்.


இந்த நிலையில் பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி குறித்த பிக்குவின் கைது தொடர்பாகவும்,சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும், நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும்  அவரது கருத்துக்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான 12 சட்டத்தரணிகளால் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு கட்டளைக்காக இன்று(29) அழைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற கட்டளை தயாரில்லை என தெரிவித்து நீதவான் மே மாதம் 29 ஆம் திகதிக்கு கட்டளைக்காக வழக்கை தவணையிட்டார்.

பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - கட்டளைக்காக திகதி குறிப்பு பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கட்டளைக்காக மே மாதம் 29 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று(29) எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றக் கட்டளை தயாராக இல்லை என தெரிவித்து நீதவான் கட்டளைக்காக வழக்கை தவணையிட்டார்.யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர் விகாரையில் குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமியை மார்ச் மாதம் 28 திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என அவரது தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.அதனையடுத்து குறித்த பிக்குவை மார்ச் மாதம் 29 ஆம் திகதி கைது செய்த  பொலிஸார், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.அதனையடுத்து சாவகச்சேரி நீதிமன்றம், பிக்குவை தொடர்ந்து  விளக்கமறியில் வைத்து பின்னர்  நிபந்தனைப் பிணைகளின் அடிப்படையில் விடுவித்திருந்தது.அந்த வழக்கில் பாதிக்கப்படவர்கள் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆஜராகியிருந்தார்.இந்த நிலையில் பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி குறித்த பிக்குவின் கைது தொடர்பாகவும்,சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும், நீதிமன்றத்திற்கு சவால் விடுக்கும் வகையிலும்  அவரது கருத்துக்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான 12 சட்டத்தரணிகளால் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு கட்டளைக்காக இன்று(29) அழைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற கட்டளை தயாரில்லை என தெரிவித்து நீதவான் மே மாதம் 29 ஆம் திகதிக்கு கட்டளைக்காக வழக்கை தவணையிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement