• Jul 18 2026

பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தவறாக நடந்துகொண்ட கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

dorin / Jul 17th 2026, 5:23 pm
image

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார். 

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். 

பின்னர் இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. 

இதற்கமைய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தவறாக நடந்துகொண்ட கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. இதற்கமைய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement