• May 19 2026

காலி மாநகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் குழப்பம்!

Ziya / Dec 24th 2025, 5:49 pm
image

தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று (24) நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பிலும் குறித்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது.

இன்றைய இரண்டாவது வாக்கெடுப்பில், ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மேயர் சுனில் கமகே, சபையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார்.

36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகர சபையில், மேயர் வெளியேறியதன் பின்னர் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நகர செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மேயரின் ஆசனத்தில் அமர்ந்து மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த முயற்சித்தார்.

அந்த முயற்சியின் போது, 17 பேர் எதிராக வாக்களித்ததுடன், 19 உறுப்பினர்கள் சபையில் பங்கேற்கவில்லை. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வாக்கெடுப்புகள் தொடர்பான இறுதித் தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகர சபைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பேலியகொடை நகரசபை வரவு செலவுத் திட்டமும் தோல்வி

இதேவேளை, பேலியகொடை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தவிசாளர் கபில கீர்த்தி ரத்ன தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், எதிராக 9 வாக்குகளும், ஆதரவாக 8 வாக்குகளும் பதிவானது.

வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த போதிலும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என தவிசாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

காலி மாநகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் குழப்பம் தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று (24) நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர், கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பிலும் குறித்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது.இன்றைய இரண்டாவது வாக்கெடுப்பில், ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மேயர் சுனில் கமகே, சபையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார்.36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகர சபையில், மேயர் வெளியேறியதன் பின்னர் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நகர செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மேயரின் ஆசனத்தில் அமர்ந்து மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த முயற்சித்தார்.அந்த முயற்சியின் போது, 17 பேர் எதிராக வாக்களித்ததுடன், 19 உறுப்பினர்கள் சபையில் பங்கேற்கவில்லை. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.வாக்கெடுப்புகள் தொடர்பான இறுதித் தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகர சபைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.பேலியகொடை நகரசபை வரவு செலவுத் திட்டமும் தோல்விஇதேவேளை, பேலியகொடை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.தவிசாளர் கபில கீர்த்தி ரத்ன தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், எதிராக 9 வாக்குகளும், ஆதரவாக 8 வாக்குகளும் பதிவானது.வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த போதிலும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என தவிசாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement