• Oct 18 2026

பொலிஸாருடன் மீண்டும் முறுகல்! தேரர் தாக்கப்பட்டாரா? நள்ளிரவிலும் ஓயாத போராட்டம்

Chithra / Oct 18th 2026, 11:03 am
image


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.


கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வந்த பௌத்த பிக்குகள், ஞானசார தேரரை விடுதலை செய்யும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என அறிவித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


அன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.


முன்னதாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பிக்குகள், பின்னர் புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.


எனினும், குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தனர்.


இந்நிலையில், நேற்று (17) இரவு போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போராட்டத்தின்போது பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக அங்கிருந்த பிக்குகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இதனையடுத்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த தேரர் கால் தவறி கீழே விழுந்ததாகவும், அதன் பின்னரே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளாமல் சுயவிருப்பில் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.


நேற்று (17) இரவு சுமார் 8.30 மணியளவில் பலாங்கொட கஸ்ஸப தேரர் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவுக்கு வருகை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது, தேரருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், கதிரியக்கப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்தப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எனினும், ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போது உடலில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


தனது தலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தேரர் தெரிவித்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கவைத்து மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.


இருப்பினும், மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை எனத் தெரிவித்த தேரர், வைத்தியசாலைக்கு வருகை தந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர், இரவு 9.30 மணியளவில் சுயவிருப்பில் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய நேரில் சென்று அவரைப் பார்வையிட்டிருந்தார்.


முன்னதாக, விஹாரமஹாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளிடம் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொலிஸார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்தும் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.


இதனால், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.

பொலிஸாருடன் மீண்டும் முறுகல் தேரர் தாக்கப்பட்டாரா நள்ளிரவிலும் ஓயாத போராட்டம் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வந்த பௌத்த பிக்குகள், ஞானசார தேரரை விடுதலை செய்யும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என அறிவித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.அன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.முன்னதாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பிக்குகள், பின்னர் புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.எனினும், குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்தனர்.இந்நிலையில், நேற்று (17) இரவு போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போராட்டத்தின்போது பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக அங்கிருந்த பிக்குகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதனையடுத்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த தேரர் கால் தவறி கீழே விழுந்ததாகவும், அதன் பின்னரே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளாமல் சுயவிருப்பில் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.நேற்று (17) இரவு சுமார் 8.30 மணியளவில் பலாங்கொட கஸ்ஸப தேரர் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவுக்கு வருகை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, தேரருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், கதிரியக்கப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்தப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும், ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போது உடலில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.தனது தலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தேரர் தெரிவித்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கவைத்து மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.இருப்பினும், மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை எனத் தெரிவித்த தேரர், வைத்தியசாலைக்கு வருகை தந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர், இரவு 9.30 மணியளவில் சுயவிருப்பில் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய நேரில் சென்று அவரைப் பார்வையிட்டிருந்தார்.முன்னதாக, விஹாரமஹாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளிடம் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொலிஸார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்தும் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.இதனால், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement