• May 11 2026

'விலைவாசி உயர்வை தாங்க முடியவில்லை' - வீதிக்கிறங்கிய திருமலை மக்கள்

Chithra / May 11th 2026, 1:18 pm
image

அத்தியவசிய பொருட்களின் விலைவாசியை கண்டித்து திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


இப்போராட்டத்தை தமிழர் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது.


இவ் கவனயீர்ப்பில் கலந்து கொண்டோர், விலைவாசி அதிகரிப்பினால் கிராமப்புற மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து, அது தொடர்பான விழிப்புணர்வு சுலோகங்களையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதேவேளை அத்தியாவசிய பொருட்களுக்கான விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை  விடுத்திருந்தனர்.  


'விலைவாசி உயர்வை தாங்க முடியவில்லை' - வீதிக்கிறங்கிய திருமலை மக்கள் அத்தியவசிய பொருட்களின் விலைவாசியை கண்டித்து திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டத்தை தமிழர் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது.இவ் கவனயீர்ப்பில் கலந்து கொண்டோர், விலைவாசி அதிகரிப்பினால் கிராமப்புற மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து, அது தொடர்பான விழிப்புணர்வு சுலோகங்களையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை அத்தியாவசிய பொருட்களுக்கான விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை  விடுத்திருந்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement