• May 27 2026

நெல் வயலில் கவிழ்ந்த ஆடைத் தொழிலாளர்கள் பேருந்து – 19 பேர் காயம்

Aathira / May 26th 2026, 9:58 am
image

கஹத்துடுவ – தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற்பகல் வீதியை விட்டு விலகி நெல் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வீதியில் சென்ற மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி நெல் வயலில் கவிழ்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 17 பேர் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கும், மற்றொருவர் வெட்டறை வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல் வயலில் கவிழ்ந்த ஆடைத் தொழிலாளர்கள் பேருந்து – 19 பேர் காயம் கஹத்துடுவ – தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற்பகல் வீதியை விட்டு விலகி நெல் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 19 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.வீதியில் சென்ற மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி நெல் வயலில் கவிழ்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காயமடைந்தவர்களில் 17 பேர் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கும், மற்றொருவர் வெட்டறை வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement