• Jul 03 2026

முல்லைத்தீவு குமுழமுனையில் ரூ.30 இலட்சம் பெறுமதியான எருமை மாடுகள் திருட்டு – பண்ணையாளர்கள் கவலை!

shanu / Jul 3rd 2026, 2:20 pm
image

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எருமை மாடுகள் திருடப்பட்ட சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 


குமுழமுனை ஆண்டான்குளம் பகுதியில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 இலட்சம் பெறுமதியான கிடாரி மாடுகள் மற்றும் பால்குடி மறந்த கன்று மாடுகள் அடையாளம் தெரியாத மாடுகடத்தல் கும்பலால் திருடிச் செல்லப்பட்டுள்ளன.


இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், தங்களது பகுதியில் தொடர்ச்சியாக மாடுகடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கடந்த ஆண்டுகளிலும் 16 மாடுகள் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.


இந்நிலையில், மீண்டும் சுமார் ரூ.30 இலட்சம் பெறுமதியான மாடுகள் திருடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் மாடுகடத்தல் கும்பல் மிகவும் திட்டமிட்ட மற்றும் சூட்சுமமான முறையில் மாடுகளை கடத்திச் செல்வதாக பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான மாடுதிருட்டு சம்பவங்களால் குமுழமுனை பகுதி பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனையில் ரூ.30 இலட்சம் பெறுமதியான எருமை மாடுகள் திருட்டு – பண்ணையாளர்கள் கவலை முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எருமை மாடுகள் திருடப்பட்ட சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குமுழமுனை ஆண்டான்குளம் பகுதியில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 இலட்சம் பெறுமதியான கிடாரி மாடுகள் மற்றும் பால்குடி மறந்த கன்று மாடுகள் அடையாளம் தெரியாத மாடுகடத்தல் கும்பலால் திருடிச் செல்லப்பட்டுள்ளன.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், தங்களது பகுதியில் தொடர்ச்சியாக மாடுகடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கடந்த ஆண்டுகளிலும் 16 மாடுகள் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில், மீண்டும் சுமார் ரூ.30 இலட்சம் பெறுமதியான மாடுகள் திருடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் மாடுகடத்தல் கும்பல் மிகவும் திட்டமிட்ட மற்றும் சூட்சுமமான முறையில் மாடுகளை கடத்திச் செல்வதாக பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான மாடுதிருட்டு சம்பவங்களால் குமுழமுனை பகுதி பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement