• Nov 14 2026

டீ குடிக்கும் போது இந்தத் தவறுகளைத் தவிருங்கள்

Ziya / Nov 14th 2026, 1:13 am
image

டீ குடிக்கும் பழக்கம் பலரிடம் காணப்பட்டாலும், அதனை அருந்தும் நேரம் மற்றும் அளவில் கவனம் செலுத்துவது அவசியம்.


காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது சிலருக்கு அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதேபோல், உணவு உட்கொண்ட உடனேயே டீ குடிப்பதால், அதிலுள்ள டானின் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கக்கூடும்.


டீத்தூளை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதையும், ஆறிப்போன டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது. 


மேலும், அதிகளவு சர்க்கரை சேர்ப்பது உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.


குறிப்பாக, இரவு தூங்குவதற்கு முன்பு டீ குடிப்பது அதிலுள்ள காஃபின் காரணமாகத் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.


எனவே, டீயை அளவோடு அருந்துவதுடன், சரியான நேரத்தில் குடிப்பதற்கும் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான பழக்கமாகும்.

டீ குடிக்கும் போது இந்தத் தவறுகளைத் தவிருங்கள் டீ குடிக்கும் பழக்கம் பலரிடம் காணப்பட்டாலும், அதனை அருந்தும் நேரம் மற்றும் அளவில் கவனம் செலுத்துவது அவசியம்.காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது சிலருக்கு அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதேபோல், உணவு உட்கொண்ட உடனேயே டீ குடிப்பதால், அதிலுள்ள டானின் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கக்கூடும்.டீத்தூளை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதையும், ஆறிப்போன டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது. மேலும், அதிகளவு சர்க்கரை சேர்ப்பது உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.குறிப்பாக, இரவு தூங்குவதற்கு முன்பு டீ குடிப்பது அதிலுள்ள காஃபின் காரணமாகத் தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.எனவே, டீயை அளவோடு அருந்துவதுடன், சரியான நேரத்தில் குடிப்பதற்கும் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான பழக்கமாகும்.

Advertisement

Advertisement

Advertisement