• Sep 01 2026

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவு

Chithra / Sep 1st 2026, 10:36 am
image


அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


அஸ்வெசும திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியுடைய புதிய பயனாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயனாளர் பெயர் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பயனாளர்கள் தங்களுடைய பெயர், பட்டியலில் உள்ளதா என்பதை உங்கள் பிரதேச செயலகங்களில் அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பெயர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், அதற்கான மேன்முறையீடுகளைச் செய்வதற்குரிய கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவு அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அஸ்வெசும திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியுடைய புதிய பயனாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயனாளர் பெயர் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பயனாளர்கள் தங்களுடைய பெயர், பட்டியலில் உள்ளதா என்பதை உங்கள் பிரதேச செயலகங்களில் அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பெயர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், அதற்கான மேன்முறையீடுகளைச் செய்வதற்குரிய கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement